சிவகார்த்தியனுக்கு வழங்கப்பட்ட சிறந்த நடிகர் விருது தவறானதா?!

சிவகார்த்தியேனுக்கு வழங்கப்பட்ட சிறந்த நடிகர் விருதில் வருடப் பிரச்னை காரணமாக குளறுபடி ஏற்பட்டுள்ளது.

தமிழக அரசு 2009ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரையிலான சிறந்த திரைப்படங்கள் விருதினை நேற்று அறிவித்தது. அதில் 2011ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் விருதை மெரினா படத்திற்காக சிவகார்த்திகேயனுக்கு அளித்துள்ளனர்.

விருது கொடுத்தது எல்லாம் ஓகே. இதில் என்ன குழப்பமென்றால் மெரினா படம் வெளியானதோ 2012ஆம் ஆண்டு பிப்ரவரி 3ஆம் தேதியாகும். எனவே மக்கள் பலரும் இதுகுறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு படத்தின் வேலைகள் முழுக்கு 2011ஆம் ஆண்டே முடிந்துவிட்டது. அதனால் தான் 2011ஆம் ஆண்டிற்கான சிறந்த நடிகர் விருது அவருக்கு அளிக்கப்பட்டது என காரணம் கூறி வருகின்றனர்.

இருப்பினும் உண்மையான காரணம் என்னவென்பது தெளிவாகத் தெரியவில்லை.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*