துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் தேஜஸ்வி யாதவ்?

பீஹார் முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் தனது துணை முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யக்கூடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

லாலு பிரசாத் யாதவ் ரெயில்வேத் துறை அமைச்சராக இருந்தபோது ராஞ்சி மற்றும் பூரி நகரங்களில் உள்ள ரெயில்வே ஓட்டல்களை குத்தகைக்கு விட்டதில் நடந்த முறைகேடு தொடர்பாக லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனையிட்டனர். முறைகேடு தொடர்பாக சிபிஐ பதிவு செய்து உள்ள வழக்கில் லாலு பிரசாத், ராப்ரி தேவி, தேஜஸ்வி யாதவ் ஆகியோரை குற்றவாளிகளாக சேர்த்துள்ளனர். லாலு மற்றும் அவருடைய குடும்பத்தினர் விசாரணை  வளையத்திற்குள் இருப்பது அக்கட்சிக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் துணை முதல்வராக இருக்கும் லாலு பிரசாத் யாதவின் மகனான தேஜஸ்வி யாதவ் பதவி விலக வேண்டுமென்று பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இதனையடுத்து  பீஹார் முதல்வர் நிதிஷ் குமார் கடந்த 11-ஆம் தேதி ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் நிர்வாகிகள், மாவட்ட தலைவர்களின் கூட்டத்தை கூட்டினார். அதில். அந்த கூட்டத்தில் தன் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டு குறித்து மக்களிடம் லாலு பிரசாத் குடும்பம் சனிக்கிழமை மாலைக்குள் விளக்கமளிக்க வேண்டுமென்றும் அப்படி விளக்கமளிக்காத பட்சத்தில் லாலுவின் மகன் தனது துணை முதல்வர் பதவியிலிருந்து  விலகி கொள்ள வேண்டுமென்றும் முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் தேஜஸ்வி யாதவோ பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை என்ற முடிவில் இருப்பதாக கூறப்பட்டது. இதனால்  நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம், லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதாதளம், ஆகிய கூட்டணியில் விரிசல் விழும் நிலை உருவாகியிருக்கிறது..

இந்நிலையில், பீகார் மாநில துணை முதலமைச்சர் தேஜஸ்வி பதவியை ராஜினாமா செய்யலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. நிதிஷ் குமார் தன்னுடைய நிலைப்பாட்டில் மிகவும் உறுதியாக இருப்பதால் லாலு பிரசாத் யாதவ் மாநிலத்தில் கூட்டணி உடைந்துவிட கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார் என்று கூறப்படுகிறது. இதனால் நிதிஷ் குமார் கட்சியின் வலியுறுத்தல் தொடர்பாக லாலு பிரசாத் யாதவ் ஆலோசனை செய்யலாம் என கூறப்படுகிறது. சனிக்கிழமை வரையில் நிதிஷ் குமார், தேஜஸ்வி பதவி விலக கால அவகாசம் வழங்கி உள்ளார், இதனை நீட்டிக்க லாலு விருப்பம் தெரிவித்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் பீஹார் அரசியலில் அடுத்த என்ன நடக்குமென்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த கூட்டணியை உடைக்க பாஜக தீவிரமாக முயற்சித்து வருவதாகவும் இதன் பின்னணியில் பாஜகதான் இருக்கிறதென்றும் கூறப்பட்டு வருகிறது. இதனால் இந்த கூட்டணி உடையாமல் இருக்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*