ராமர் கோவிலை எதிர்த்தால் ஹஜ் பயணம் செல்ல முடியாது : பாஜக எம்.எல்.ஏ மிரட்டல்

அயோத்தில் கட்டப்பட உள்ள ராமர் கோவிலை இஸ்லாமியர்கள் எதிர்த்தால், அவர்கள் ஹஜ் புனிதப் பயணம் செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று உத்தரப்பிரதேச மாநில  எம்.எல்.ஏ. பிரிஜ்பூஷன் ராஜ்புத்  மிரட்டல் விடுத்துள்ளார்.

உ.பி.மாநில முதல்வராக யோகி ஆதித்யநாத் முதல்வராக பதவியேற்றதிலிருந்து அங்கு சிறுபான்மை மக்களுக்கு எதிராக தாக்குதல்களும் கருத்துக்களும் அதிகளவில் வளர்ந்து நிற்கின்றன. மிகக் கொடுமையாக எம்.எல்.ஏக்களே இந்த மாதிரியான கருத்துக்களை கூறி வருகின்றனர். இதனால் அங்கு எப்போதும் ஒரு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதனை கண்டிக்க வேண்டிய முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தும் எதையும் கண்டுகொள்ளாமல் அமைதியாக இருக்கிறார். மத்தியில் ஆளும் பாஜக அரசு இந்த மாதிரி கருத்து கூறுபவர்களை கண்டிக்காமல் இருந்து வருகிறது. இதனால் இது போன்று கருத்து கூறுபவர்களை மத்திய அரசு மறைமுகமாக ஊக்குவிக்கிறதோ என்ற கருத்தை பெரும்பான்மையானோர் வைத்து வருகின்றனர். மேலும் உத்தரப்பிரதேசம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடம் யாருக்கு சொந்தம் என்பது குறித்து பல ஆண்டுகளாக தீராத பிரச்சினையாக இருந்து வருகிறது. இது குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. ஆனால் சமீபத்தில் ராமர் கோவில் கட்டுவதற்காக வி.ஹெச்.பி அமைப்பினரால் கற்கள் இறக்கப்பட்டன. அந்த அமைப்பினரின் இந்த சர்ச்சைக்குரிய செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், உ.பி. மாநிலத்தின் சர்க்காரி தொகுதியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.பிரிஜ்பூஷன் ராஜ்புத் என்பவர், இஸ்லாமியர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறியுள்ளார். அவர் கூறியதாவது ,இந்தியா என்பது இந்துக்கள் இருக்கும் நாடு. அயோத்தில் ராமர் கோயில் கட்டுவதை இஸ்லாமியர்கள் எக்காரணம் கொண்டு எதிர்க்கக் கூடாது. இஸ்லாமியர்கள் புனித ஹஜ் பயணம் செல்வதற்கு மத்திய அரசும், மாநில அரசும் நிதி உதவி அளிக்கிறது. ஆனால், இந்த நிதி உதவி திட்டத்தை இந்துக்கள் யாரும் எதிர்க்கவில்லை. அதேபோல, ஹிந்துக்கள் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதையும் எதிர்க்க கூடாது. அதை தவிர்த்து ராமர் கோவில் கட்டுவதை இஸ்லாமியர்கள் எதிர்த்தால்,  மெக்கா,மெதினாவுக்கு புனித பயணம் செல்ல முடியாது, அதற்கு அனுமதி தரமாட்டோம். இது நடக்கும்’’ எனத் தெரிவித்துள்ளார்.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*