சத்தியராஜ் மகளுக்கு கொலை மிரட்டல்: பிரதமருக்கு கடிதம்!

தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர்களில் ஒருவர் சத்தியராஜ். அவரது மகள் திவ்யா. இவர் சென்னையில் அமைந்துள்ள பிரபல தனியார் மருத்துவமனை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். கடந்த வாரம் சில வெளிநாட்டு மருத்துவ நிறுவனங்கள் திவ்யா சத்யராஜை தவறான மருந்தை பிரயோகிக்க கோரினர். அவர் மறுத்ததை தொடர்ந்து அவருக்கு லஞ்சம் கொடுக்கமுயன்றனர். இதனையடுத்தும் அவர் மறுத்ததால் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.

இந்நிலையில் இவர் பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அரசால் அங்கீகரிக்கப்படாத மேலும் மக்களுக்கு கேடுவிளைவிக்கக் கூடிய அபாயகரமான மருந்துகளை தடை செய்யுமாறு எழுதியுள்ளார். மேலும் நீட் தேர்வினால் வேற்றுமொழி மாணவர்களுக்கு செய்யப்பட்ட அநியாயத்தையும் அதனால் நாடு முழுக்க உண்டாக இருக்கும் பயங்கரங்களைப் பற்றியும் எழுதியுள்ளார்.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

1 Comment

  1. அபாரம்! திவ்வியாவின் துணிச்சலுக்கும், நேர்மைக்கும் இந்திய மக்கள் நன்றியுள்ளவர்களாக இருப்பர். திவ்வியா சுட்டிக்காட்டுபவர்கள் போல் ஏராளமானோர் இந்தியாவில் உள்ளனர்.இவர்கள்தான் மக்களின் உண்மையான எதிரிகள். இந்த எதிரிகளை அம்பலப்படுத்திய திவ்வியா, இவர்களுக்கு எதிரான போராட்டத்தில் தொடர்ந்து முன்னேற வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published.


*