திலீப் எனும் புனிதர்: ஊடக அட்டூழியங்கள்!

நடிகை பாவனா பாலியல் வன்முறை வழக்கில் கைதான திலீப் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்ற வேளையில், அவர் செய்த பழைய உதவிகளை முன்னெடுத்து வைத்து புனிதர் பட்டம் கொடுத்து வருகிறது சில வலைதளங்கள். மனோரமா பத்திரிகையின் அங்கமான ‘வனிதா’, திலீப் கைதான நாட்களில் இருந்து அவருக்கு ஆதரவாக கட்டுரைகளை எழுதி வருகின்றனர். இந்த வழக்கு இன்னும் முடியாத நிலையில், திலீப் ஆதரவாளர்கள் அவரை மக்களை காக்கும் நாயகனாக சித்தரிக்க துவங்கியுள்ளனர்.

வனிதா பத்திரிகையில் திலீப் ஆதரவற்ற குடும்பத்துக்கு வீடு வழங்கியது, தயாரிப்பாளர் ஃபரித் கானின் புற்றுநோயால் பதிக்கப்பட்ட மகன் திலீப்பை திரையில் கண்டதும் சிரிப்பது என திலீப்பின் கருணை காவியங்களாக இருக்கிறது. சாலை விபத்து வழக்கில் சிக்கிய சல்மானுக்கும் இதுபோன்ற கருணை வடிவ கட்டுரைகள் எழுதப்பட்டன. திலீப்புக்கு இன்னும் ஒருபடி மேலே போய், ‘stand with dileep’ என்ற முகநூல் பக்கத்தை துவங்கி அவருக்கு ஆதரவாக பதிவிட்டு வருகின்றனர். மஞ்சு வாரியருடன் விவாகரத்தான நாளிலிருந்தே திலீப் ஊடகங்களை தனக்கு சாதகமாக பயன்படுத்தி வருகிறார். ஊடகங்களின் பார்வையில் அப்பாவியாகவே தெரிந்த ‘ஜனப்பிரிய நாயகன்’ திலீப்பை இந்த வழக்கில் இருந்து காப்பாற்றும் அத்தனை முயற்சிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஆனால் அவை எதுவும் புதிய தகவல்கள் இல்லை என்றாலும் திலீப் மீது மக்களுக்கு கருணையை அதிகரிக்கிறது. இதனால் திலீப் மீதுள்ள குற்றங்கள் நிரூபிக்கப்பட்டாலும், மக்கள் அதை நம்பாத அளவுக்கு ஊடகங்கள் அவரை சித்தரித்துவிடும் ஆபாயம் உள்ளது.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*