ஹன்சிகாதான் சங்கமித்ராவா?

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில் 400கோடி பட்ஜெட்டில் உருவாகவிருக்கும் வரலாற்றுப் படம் சங்கமித்ரா. இப்படத்தில் ஜெயம் ரவி மற்றும் ஆர்யா நடிக்கும் இப்படத்தின் முக்கிய கதாப்பாத்திரமாக சங்கமித்ரா கதாப்பாத்திரத்தில் நடிப்பதற்காக ஸ்ருதிஹாசன் தேர்வு செய்யப்பட்டு பர்ஸ்ட் லுக் போஸ்டர்களும் வெளியானது.

பின்னர் ஸ்ருதிஹாசன் படத்திலிருந்து நீக்கப்பட்டாரா? இல்லை தானே விலகினாரா? என்ன காரணம் என்பது தெரியவில்லை. இதையடுத்து சங்கமித்ரா வேடத்தில் நடிக்க அனுஷ்கா மற்றும் நயன்தாரா ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அது தோல்வியில் முடிய இக்கதாப்பாத்திரத்திற்கு சமீபத்தில் ஹன்சிகா தேர்வு செய்யப்பட்டதாக செய்திகள் கசிந்தன. தற்பொழுது அதனை உறுதிப்படுத்தும் விதமாக ஹன்சிகாவை வைத்து லுக் டெஸ்ட் மற்றும் போட்டோஷூட் நடத்தியுள்ளனர். அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*