பாபா ராம்தேவ் செக்யூரிட்டி சர்விஸ்!

பதஞ்சலி நிறுவனத்தின் தலைவர் பாபா ராம்தேவ், புதிதாக தனியார் பாதுகாப்பு நிறுவனம் ஒன்றை துவங்கியுள்ளார். பாபா ராம்தேவ் பாதுகாப்பு நிறுவனம் ஆரம்பித்தால் எப்படி இருக்கும் என்ற யோசனை எல்லார் மனதிலும் எழுவது சகஜம். ‘பரக்ரம் சுரக்‌ஷா’ என்ற பெயரில் துவங்கப்பட்டுள்ள இதில் ஆயுத பயிற்சி மற்றும் யோகா பயிற்சி வழங்கப்படுகிறது. முன்னாள் இராணுவ அதிகாரிகளை பயிற்சியாளர்களாக நியமிக்க திட்டமிட்டுள்ளனர். ஏனென்றால், அவர்கள்தான் நாட்டுக்காக உயிரை கொடுக்க தயங்காதவர்கள். எனவே அவர்களை பயிற்சியாளராக நியமிப்பதுதான் சரியாக இருக்கும் என கருதுகின்றனர். ஏற்கனவே 1,000 பாதுகாவலர்கள் ஹரித்வார் பகுதியில் தயாராக உள்ளனர். மேற்படி பாதுகாப்பு பணிக்கு நேர்காணல் நடந்து வருகின்றன.‘பாரத் மாதா கீ ஜெய்’ சொல்லாதவர்களின் தலையை வெட்டுவேன் என்று சொன்ன பாபா ராம்தேவ், மிக உல்லாசமாக புதிய நிறுவனம் தொடங்குகிறார்.

விஜய் டிவி போன்ற தமிழ் தொலைக்காட்சி நிறுவனம், அவரை வைத்து நிகழ்ச்சி நடத்தி தங்கள் டிஆர்பி ரேட்டிங்கை ஏத்திக்கொள்கின்றது. பாஜக அரசாங்கத்தில், இந்துத்துவா கொள்கை உடைய ஒரு நபர் என்ன தவறு செய்தாலும் எந்த கவலையுமின்றி இருக்கலாம் என்பதற்கு பாபா ராம்தேவ் ஓர் வாழும் உதாரணம்.

1 Comment

  1. இந்துத்துவா என்பது என்ன? நாட்டின் அரசியல் அதிகாரத்தை படிப்படியாக பிராமணிய மத நிறுவனங்களின் கைகளிற்கு மாற்றுவதேயாகும்.இந்தியாவில் இதுவரை ஒழிவுமறைவாக நடந்துவந்த எதிர்ப்புரட்சி, தற்போது வெளிப்படையாக நடக்கத் தொடங்கிவைட்டது. பிஜேபி இம் மதநிறுவங்களின் அரசியல் எடுபிடி மாத்திரமே. பாராலுமன்றத்தையும் தமது எடுபிடி அமைப்பாக மாற்றுவதே இம்மத நிறுவனங்களின் குறிக்கோளாகும்.

Leave a Reply

Your email address will not be published.


*