சிறையில் சசிகலா : உங்கள் பிரச்சனை என்ன? #Video

பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலா தொடர்பாக மற்றொரு புதிய வீடியோ வெளியாகியுள்ளது.

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டிருப்பதாக கர்நாடகா சிறைத் துறை டிஐஜியாக இருந்த ரூபா குற்றச்சாட்டினை முன்வைத்தார். அதனை சிறைத்துறை அதிகாரிகள் மறுத்து வந்த நிலையில் அவருக்கு அளிக்கப்பட்டிருக்கும் சிறப்பு சலுகைகள் தொடர்பான சிசிடிவி கேமரா காட்சிகள் ஒவ்வொன்றாக வெளியாகி கொண்டிருக்கிறது. இன்று காலை சசிகலா சிறைக்குள் உலா வருவது  போன்ற வீடியோ காட்சி ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

 

இந்நிலையில் காலையில் வெளியான வீடியோ காட்சியின் பரபரப்பு அடங்குவதற்குள்ளாகவே தற்போது அடுத்த வீடியோ காட்சி ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த வீடியோ காட்சியில் சசிகலா சல்வார் அணிந்து கொண்டு சிறை வளாகத்தில் நடப்பது பதிவாகியுள்ளது. காலையில்  சசிகலா நைட்டியில் இருக்கும் வீடியோ வெளியானது, தற்போது அவர் சல்வாரில் இருக்கும் வீடியோ வெளியாகியிருக்கிறது. ஒரு சிறைக்குள் இருக்கும் சிசி டிவி கேமரா காட்சிகள் எப்படி அடுத்தடுத்து வெளிவருகிறது என்றும், இந்த வீடியோவை வெளியிடுபவர்கள் யார் என்றும் பல்வேறு தரப்பினரால் கேள்வி முன்வைக்கப்பட்டு வருகிறது. சசிகலா தொடர்பான வீடியோக்கள் இவ்வாறு தொடர்ந்து வெளிவருவது ஒரு தனி மனித உரிமை மீறல் என்ற வாதமும் சிலரால் வைக்கப்படுகிறது. மேலும் இந்த வீடியோ காட்சிகள் அனைத்தும் ஏற்கனவே ரூபாவிடம் இருந்ததாகவும் அவரது தரப்பினர்தான் இந்த வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள் என்றும் கூறப்படுகிறது. சசிகலா தொடர்பான வீடியோக்கள் தொடர்ந்து வெளியாகி வருவது கர்நாடகா அரசுக்கு சிக்கலை அதிகப்படுத்திக் கொண்டே போகிறது. எனவே அரசின் மீது இருக்கும் நம்பிக்கையை காப்பாற்றும் விதமாக சசிகலாவை வேறு சிறைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கையில் அரசு ஈடுபட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சசிகலா நைட்டி போட்டிருந்தார், சல்வார் எல்லாம் போட்டு உலா வருகிறார் என்று எழுதுகிறவர்கள் யாரும். அவர் சிறையில் என்ன ஆடையை அணிய வேண்டும் என்று சொல்வதில்லை. தவிறவும். அவர் ஏதோ  சிறையில் இருந்து தப்பி  லீ மெரிடியன்  ஹோட்டலில் தங்கியிருப்பது  போன்றும் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இதுவரை வெளியான விடியோக்களில் அவர்  சிறையில் ஆடம்பர வாழ்க்கை நடத்துவதற்கான அறிகுறி எதுவும் தென்படாத நிலையில் அவரை குறிவைத்து வெளியிடப்படும் விடியோக்கள் அரசியல் தளத்தில் பல கேள்விகளை எழுப்புகின்றன.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*