உலகம் வேகமாக அழிந்து வருகிறது – ஆய்வு முடிவில் அதிர்ச்சி

உலகவெப்பமயமாதல் (Global Warming) மற்றும் பருவநிலை மாற்றம் (Climate Change) ஆகிய இரண்டும் உலக மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நிலையில், ஆசியக் கண்டம் எதிர்பாராத அளவிற்கு பெரிய ஆபத்தை சந்திக்க நேரிடும் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

உலகின் 5-வது மிகப்பெரிய கண்டமான அண்டார்டிக்கா பனியால் சூழப்பட்டுள்ளது. புவியில் உள்ள நன்னீரில் கிட்டத்தட்ட 70 சதவீதமானது இங்கிருக்கும் நிலையில் இங்கே மக்கள் நிரந்தரமாக வாழ வழி எதுவும் கிடையாது. எனினும், பல்வேறு உலக நாடுகளின் ஆய்வுக்கூடங்கள் மட்டும் ஆய்வுக்காக இங்கு இருக்கின்றன. இந்த நிலையில், புவி வெப்பமடைதல் மற்றும் பருவநிலை மாற்றம் காரணமாக அண்டார்டிகா தீபகற்பத்தில் இருக்கும் உலகின் மிகப்பெரிய பனிப்பாறை பாதியளவாக பிரிந்துள்ளது. இதனையடுத்து, உலக மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என விஞ்ஞானிகள் எச்சரித்திருந்தனர்.

இந்த எச்சரிக்கையை மேலும் மெருகூட்டும் வகையில், பசிபிக் மற்றும் ஆசிய பிராந்தியத்தில் மோசமான பாதிப்புகள் ஏற்படப்போவதாகவும் விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பூமியில் மனித இனம் தொடர்ந்து வசிப்பதற்கான வாய்ப்புகள் படிப்படியாக குறைந்து கொண்டு வருவதாக ஆசிய வளர்ச்சி வங்கி மற்றும் பாட்ஸ்மேன் பருவநிலை தாக்க ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதிலும் குறிப்பாக சீனா, இந்தியா, வங்கதேசம் மற்றும் இந்தோனேசியாவில் இதன் பாதிப்பு அதிக அளவில் இருக்கும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வரலாற்றிலேயே அதிக வெப்பம் பதிவான ஆண்டாக கடந்த 2016ம் ஆண்டு ஆசியா இடம்பிடித்துள்ளது. மேலும் இந்த 2017ம் ஆண்டிலும் கடந்த ஆண்டைவிட அதிக வெப்பம் பதிவாகியுள்ளது. அதிகரித்துவரும் உலக வெப்பமயமாதலால் ஆசிய கண்டத்தில் தென் இந்தியா உள்ளிட்ட சீனா, பங்களாதேஷ் போன்ற நாடுகள் கடுமையாக பாதிக்கப்படும் அறிகுறிகள் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும், குறிப்பிட்ட இந்த நாடுகளில், 2030ம் ஆண்டு அரிசி உற்பத்தியில் மிகப்பெரும் பின்னடைவு ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த உலக வெப்பமயமாதலாலும் பருவநிலை மாறுபாட்டாலும் இந்தியா, பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் உள்ள கடலோர பகுதிகளில் உள்ளவர்களில் 13 கோடி பேர் உயிரிழக்க வாய்ப்புள்ளதாகவும் கடலோரப்பகுதிகள் கடலில் மூழ்கும் அபாயம் இருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கைவிடுத்துள்ளனர்.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

1 Comment

  1. Except Donald Trump, this reality is generally realised by many millions of Scientists. Global warming is a real threat will disturb the nature’s balance and will be impossible to be controlled by the humankind.

Leave a Reply

Your email address will not be published.


*