20 மில்லியன் ஆண் கொசுக்களை உற்பத்தி செய்யும் கூகுள்

கணினியுகத்தில், முன்னணியில் உள்ள கணினி நிறுவனமான கூகுள், உலகின் முக்கியப் பிரச்சினையான கொசுத் தொல்லையை தீர்த்து வைப்பதற்காக முன்வந்துள்ளது. கூகுள் நிறுவனம் பல வகையான கணினி தொழில் நுட்பங்களை அறிமுகப்படுத்தி வருகின்றது. ஆனால் தற்போது, கணினியை மட்டும் சாராது, உயிர் அறிவியல் தொழில் நுட்ப (Verily Life Science) துறையான வெரிலி உதவியுடன் தற்போது 20 மில்லியன் ஆண் கொசுக்களை உற்பத்தி செய்து பறக்கவிட இருக்கின்றது.

உலகினைப் பொறுத்தவரையில் அதிக நோய்களை பரப்பும் பட்டியலில் முதல் உயிரினமாக கொசு உள்ளது. இத்துடன், புதிதாக உருவாகும் வைரஸ் நோய்களை மக்களிடம் பரப்பும் ஒரு முக்கிய உயிரினமாகவும் கொசு உள்ளது. இதனால் தான் கொசுவை அழிக்கும் முயற்சியில் அதிரடியாக இறங்கியுள்ளது கூகுள் நிறுவனம்.

கூகுள் நிறுவனம் கொசு உற்பத்தி செய்ய முக்கியக் காரணம் என்னவென்றால் கொசுக்களின் இனப்பெருக்கத்தை குறைப்பதற்காகவே உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. கூகுள் உருவாக்கியுள்ள ஆண் கொசுக்கள் மலட்டுத்தன்மை கொண்டவை ஆகும்.

இந்த ஆண் கொசுக்களுடன் இணையும் பெண் கொசுக்கள் முட்டைகள் இட்டாலும், அதிலிருந்து புதிய கொசுக்கள் வெளியேவர இயலாது. இதனால் கொசுக்களின் உற்பத்தி குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மலட்டுத்தன்மை கொசுக்களில் எந்த மரபணு மாற்றங்களும் செய்யப்படவில்லை. பாக்டீரியாக்கள் மூலம் மலட்டுத்தன்மை ஏற்படுத்துவதால் எந்த பிரச்னையும் ஏற்படாது என்றும் கூகுள் தெரிவித்துள்ளது.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*