நெடுவாசலுக்கு ஆதரவாக களமிறங்கிய மாணவர்கள் கைது!

நெடுவாசல் பிரச்னைக்காக கோவையில் போராட்டத்தைத் தொடங்கிய மாணவர்களை காவல்துறையினர் உடனடியாக கைது செய்து அப்புறப்படுத்தினர். இதனால்  அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் என்ற பெயரில் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை கடந்த பிப்ரவரி மாதம் 15-ஆம் தேதி அனுமதி அளித்தது. விளைநிலங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுவாசலில் இரவு பகலாக கிராம மக்கள், மாணவர்கள், இளைஞர்கள் என பல்லாயிரக்கணக்கானோர் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். 100 நாட்களுக்கும் மேலாக அங்கு போராட்டம் நடைபெற்று வருகிறது. ஆனால் பாஜகவின் பொம்மை ஆட்சியாக செயல்பட்டு வரும் தமிழக அரசு எதனையும் கண்டுகொள்ளாமல் எம்.எல்.ஏக்களுக்கு சம்பள உயர்வு அளித்து செயல்படாமல் இருக்கிறது.

இந்நிலையில் நெடுவாசல் மற்றும் கதிராமங்கலம் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கோவை வ.ஊ..சி மைதானத்தில் திடீரென திரண்ட மாணவ-மாணவிகள் நேற்று போராட்டத்தில் குதித்தனர். 100 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தியும் இதுவரை மத்திய மாநில அரசுகள்  இதற்கு செவி சாய்க்கவில்லை என்றும், அந்த மக்களுக்கு ஆதரவு தெரிவித்து தொடர் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் வ.ஊ.சி மைதானத்தில் கூடிய மாணவர்கள் தெரிவித்தனர். போராட்டம் தொடங்கிய மாணவர்கள் குவியத் தொடங்கினர். இதனால் அச்சமடைந்த காவல் துறையினர். இங்கு போராட்டம் நடத்தக்கூடாது என கூறி அங்கிருந்த மாணவர்களை வெளியேறும்படி கூறினர். அங்கிருந்து செல்லாதவர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்து வெளியேற்றினர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*