வெங்கய்யா நாயுடுவுக்கு எடப்பாடி பழனிசாமி ஆதரவு!

துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜகவின் வேட்பாளரான வெங்கய்யா நாயுடுவை ஆதரிப்பதாக எடப்பாடி பழனிசாமி அணி தெரிவித்துள்ளது.

இந்தியாவின் 14-வது குடியரசுத் தலைவராக பாஜக நிறுத்திய ராம்நாத் கோவிந்த் வெற்றி பெற்று விரைவில் பதவியேற்கவுள்ளார். இதனையடுத்து தற்போது துணை குடியரசுத் தலைவராக ஹமீது அன்சாரியின் பதவிக்காலமும் முடிவடையவிருப்பதால் அதற்கான தேர்தல் வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான எதிர்கட்சிகள் சார்பில் காந்தியின் பேரனான கோபாலகிருஷ்ண காந்தி நிறுத்தப்பட்டுள்ளார். பாஜக சார்பில் வெங்கய்யா நாயுடு நிறுத்தப்பட்டுள்ளார். தென்னிந்தியரை நிறுத்தி வெற்றி பெற செய்வதன் மூலம் தென்னிந்தியாவில் வலுவாக காலூன்றிவிடலாம் என்ற திட்டத்தில் பாஜக வெங்கய்யா நாயுடுவை வேட்பாளராக நிறுத்தியுள்ளது.

இந்நிலையில், துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் யாருக்கு ஆதரவு தெரிவிப்பது என்பது குறித்து முடிவு செய்வதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் எடப்பாடி பழனிசாமி அணியை சேர்ந்த 20 எம்.பிக்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் அனைவரும் எதிர்பார்த்தது போல் எடப்பாடி பழனிசாமி அணியினர் துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் வெங்கய்யா நாயுடுவுக்கு ஆதரவளிக்குமென முடிவு செய்யப்பட்டது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*