குண்டர் சட்டம் எதிரொலி : பல்கலைகழகத்திலிருந்து வளர்மதி இடைநீக்கம்!

கதிராமங்கலம் போராட்டத்துக்கு ஆதரவாக துண்டு பிரசுரம் விநியோகம் செய்த சேலம் மாணவி வளர்மதி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதையடுத்து பல்கலைகழகத்தில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பெரியார் பல்கலைகழகத்தில் இதழியல் படித்துவரும் மாணவி சேலத்தை சேர்ந்த வளர்மதி. இவர், கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி நிறுவனம் எண்ணெய் எடுப்பதற்கு எதிராகவும், நெடுவாசலில்,ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு எதிராகவும் துண்டு பிரசுரங்களை சேலம் அரசு மகளிர் கலை கல்லூரிக்கு அருகில் விநியோகம் செய்தார். மக்கள் நலனுக்காக துண்டு பிரசுரம் விநியோகித்தவரை தீவிரவாதி போல் சித்தரித்து கடந்த 13-ஆம் தேதி காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இவரின் மீது திடீரென குண்டர் சட்டம் போடப்பட்டது. இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் எழுப்பிய கேள்விக்கு, பதிலளித்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலம் மாணவி வளர்மதி மீது ஏற்கனவே 6 வழக்குகள் உள்ளதாகவும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்த காரணத்தால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் தெரிவித்தார். மேலும் கிளர்ச்சியை தூண்டும் விதத்தில்ல் செயல்பட்டால் குண்டர் சட்டம் பாயும் என்றும் கூறியிருந்தார். பழனிசாமியின் இந்த பதில் கடும் விமர்சனத்துக்குள்ளானது.

இந்நிலையில், கதிராமங்கலம் போராட்டத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்த சேலம் மாணவி வளர்மதி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதையடுத்து பெரியார் பல்கலைகழகத்திலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மக்கள் நலனுக்காக போராடிய ஒரு மாணவியின் கல்வி பாதிக்கப்படுமென்றுகூட யோசிக்காமல் அவர் மீது குண்டர் சட்டத்தை போட்டது தமிழக அரசு. ஒரு மாநில அரசு தனது மாநில மாணவ-மாணவர்களின் எதிர்காலத்தை காப்பதற்கான முயற்சிகள்தான் எடுக்கும். ஆனால் பாஜகவின் கைக்கூலியாக செயல்பட்டு வரும் தமிழக அரசுதான் தனது மாநிலத்தை சேர்ந்த ஒரு மாணவியின் எதிர்காலத்தையும், கல்வியையும் சீர்குலைத்துள்ளது. தமிழக அரசு மாணவி வளர்மதி மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை உடனடியாக ரத்து செய்து அவரை விடுதலை செய்து, வளர்மதி இடைநீக்கம் செய்யப்பட்டதை திரும்ப பெற பெரியார் பல்கலைகழகத்துக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டுமென்பது அனைவரின் கருத்தாக இருக்கிறது.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*