மொட்டை அடித்து விவசாயிகள் போராட்டம்!

டெல்லியில் தமிழக விவசாயிகள் 8-வது நாளாக மொட்டையடித்து  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் கடும் வறட்சி நிலவுவதால்  வங்கிகளில் வாங்கிய விவசாய கடன் ரத்து, நதிகளை இணைத்தல், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் அய்யாக்கண்ணு தலைமையில் டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற்னர். கடந்த 16-ஆம் தேதி தொடங்கிய போராட்டம் இன்றுவரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மனிதர்களை ஏரில் பூட்டி உழுதல், செருப்பு, துடைப்பத்தால் அடித்துக்கொள்ளுதல் என தினம் ஒரு போராட்டத்தை விவசாயிகள் நடத்தி வருகின்றனர். ஆனால் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியோ இந்த போராட்டத்தை கண்டுகொள்ளாமல் எம்.எல்.ஏக்களுக்கு சம்பளத்தை உயர்த்துவது, டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்துவது அவர்களின் தனிப்பட்ட விருப்பம் என்று கூறி அவர்களது போராட்டத்தை கொச்சைப்படுத்துவதுமாக இருக்கிறார்.

இந்நிலையில், டெல்லியில் தமிழக விவசாயிகள் இன்று 8-வது நாளாக போராட்டம் நடத்தினர். இதில், காலை 10 மணிக்கு மனித மண்டை ஓடுகள், எலும்பு துண்டுகள், விஷ பாட்டில்கள் ஆகியவற்றுடன் விவசாயிகள் போராட்டத்தை தொடங்கினர். நேற்று பாதி மொட்டை அடித்த குப்பாகவுண்டர், சக்கரபாணி, செல்லப்பெருமாள், சதாசிவம், சுப்பிரமணி ஆகிய 5 விவசாயிகளும் இன்று முழு மொட்டை அடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*