2 நிமிடத்திற்கு 5 கோடி வாங்கிய நயன்தாரா

நயன்தாரா நடிப்பில் அறம், இமைக்கா நொடிகள், வேலைக்காரன் என்று அடுத்தடுத்து நிறைய படங்கள் வெளியாக இருக்கிறது. தற்போது கதாநாயகியாக பெரிய கதாநாயகர்களின் படத்தில் வலம் வராமல் தனித்து செயல்பட்டு கதாநாயகிகளுக்கு முக்கியத்துவமுள்ள கதைகளில் நடித்து வருகிறார் நயன்தாரா.

அதில் வெற்றியும் கண்டு வருகிறார். அதனால் பெரிய ஹீரோக்களின் கால்ஷீட்டை வாங்குவதற்கு பதில் பலர் நயன்தாராவின் கால்ஷீட்டை வாங்கினால் போதும் என்று அவரை சுற்றி வருகின்ற்னர். அவருக்கான பலகோடி ரூபாய் சம்பளத்தையும் தர தயாராக இருக்கின்றனர்.

இந்நிலையில் தற்பொழுது கிட்டத்தட்ட இரண்டு நிமிடத்துக்குள் வரும் டாடா ஸ்கை விளம்பரத்தில் நடித்துள்ளார் நயன்தாரா. அதற்கான அவரது சம்பளத் தொகை மட்டும் 5 கோடி ரூபாய் என கூறப்பட்டு வருகிறது. இதனால் படத்திற்கு இனி எவ்வளவு சம்பளம் கேட்பார் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. இதனால் தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் பீதியடைந்துள்ளனர்.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*