முட்டாள் அரசியல்வாதிகளே! -கொதித்த கமல் ரசிகர்கள்!

“தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்திருக்கிறது” என சில நாட்களுக்கு முன்பு பேட்டியில் வெளிப்படையாக விமர்சித்த கமலுக்கு ஆதரவாக ஸ்டாலின்,  உட்பட  தலைவர்கள் ஆதரித்து வரும் நிலையில்… அதிமுக வினரும் பாஜக வினரும் கடுமையாக கமலை விமர்சித்து வருகின்றனர். கமலும் தனது அரசியல் பிரச்சாரத்தை தீவிரமாக செயல்படுத்திக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் கமலை தொடர்ந்து அரசியல்வாதிகள் விமர்சிப்பதைக் கண்டு கோபமடைந்த அவரது ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக மதுரையில் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.

 

 

 

அதில் அவர்கள் அரசியல்வாதிகளை கடுமையாக விமர்சித்துள்ளனர். அதை அறிந்த கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் பின்வருமாறு கூறியுள்ளார். ரசிகர்களே போஸ்டர் ஒட்டும் செலவை நற்பணிக்காக செய்யுங்கள். இவர்களுக்கு பதிலளிக்க நானே போதும். உங்கள் தரத்தை நீங்கள் இழக்காதீர்கள் என குறிப்பிட்டுள்ளார்.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*