பாஜக-வுக்கு சாதகமாக வாக்குப்பதிவு இயந்திரம்?

மஹாராஸ்டிரா மாநிலம், புல்தானா மாவட்டத்தில நடைபெற்ற மாவட்ட பஞ்சாயத்து தேர்தலின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்குகள் பதிவாகியிருக்கிறது.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் நம்பகத்தன்மை குறித்து தொடர்ந்து கேள்விகள் எழுந்து வருகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு உத்தர பிரதேசம் மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்ற தேர்தலிலும் இந்த சர்ச்சை எழுந்தது. இந்திய தேர்தல் ஆணையம், வாக்குப்பதிவு இயந்திரத்தில் எந்த கோளாறும் ஏற்படாது என உத்தரவாதம் அளித்தது. அதேபோல் வாக்குப்பதிவு இயந்திரத்தில் மற்றவர்களால் ஊடுருவி (Hack) செயல்பட முடியாது என சவால் விட்டிருந்தது.

புல்தானா மாவட்டம், சுல்தான்பூர் கிராமத்தில்தான் வாக்குப்பதிவு இயந்திரம் கோளாறடைந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புல்தானா மாவட்ட ஆட்சியர் இதனை உறுதிபடுத்தியுள்ளார். சுயேட்சை வேட்பாளருக்கு வாக்களிக்கும் போது, பாஜக வேட்பாளருக்கு அந்த ஓட்டு விழுந்துள்ளது. தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் அனில் கல்காலி மூலமாக இந்த விசயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. எனவே அந்தப் பகுதி மக்களுக்கு வேறொரு நாளில் வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இதுபோன்ற கோளாறால்தான் பாஜக வெற்றி பெற்றது என்று கூற ஆதாரங்கள் ஏதும் இல்லை. எனினும் கோளாறு ஏற்பட்ட வாக்குப்பதிவு இயந்திரம் எப்படி பாஜக-வுக்கு மட்டும் ஆதரவாக செயல்படுகிறது என்ற கேள்வி மிச்சம் இருக்கிறது.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*