நீட் தேர்வு: திமுகவை பாராட்டிய வைகோ!

திமுக மீது எப்போதும் கடும் விமர்சனங்களை முன் வைக்கும் வைகோ நீட் விவகாரத்தில் திமுக மாணவர் நலனுக்காக போராடுகிறது என்று பாளையங்கோட்டையில் தெரிவித்தார்.
இன்று செய்தியாளர்களிடம் பேசிய வைகோ “ கதிராமங்கலம் போராட்டம் நியாயமானது. போராடியதற்காக பேராசிரியர் ஜெயராமன் மீது பொய் வழக்கு போட்டிருக்கிறது அரசு.காவல்துறையை தவறாக வழி நடத்தும் அரசு போராடுகிறவர்கள் மீது குண்டர் சட்டம் உள்ளிட்ட கைது நடவடிக்கைகளை அரங்கேற்றி வருகிறது. மாணவி வளர்மதி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டது கடுமையான கண்டத்திற்குரியது. நீட் தேர்வை பொருத்தவரை மாணவர்களின் நலனுக்காக திமுக போராட்டம் நடத்தி வருகிறது. நீட் தொடர்பாக மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமனின் கருத்துக்கள் அகந்தையும் ஆணவமும் கொண்டது.பள்ளிகளில் தமிழ் தாய் வாழ்த்தும், தேசிய கீதமும் ஏற்கனவே உள்ள நிலையில் வந்தேமாதரம் பாடல் புதிதாக எதற்கு?” என்று கேள்வி எழுப்பினார் வைகோ!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*