பூமிக்கு அடியில் சீனாவின் சாதனை

சீனாவில் பூமிக்கு அடியில் 31 மாடியில் சுரங்க ரயில் நிலையம் ஒன்றை அமைக்கும் பணியில் அங்குள்ள மெட்ரோ ரயில் அமைப்பு ஒன்று தீவிரமாக செயல் புரிந்து வருகின்றது.

சீனாவின் சாங்கிங் மாகாணத்தில் கடந்த சில காலமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுவருகின்றது. இதனை கட்டுப்பட்டுத்தும் வகையில் தான் இந்த மெட்ரோ ரெயில் நிலையம் அமையவுள்ளது. Hongtudi எனும் இந்த ரயில் நிலையம் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு பூமிக்கு 60 மீட்டர் அடியில் அமைக்கப்பட்டது. இதனுடன் சேர்த்து இந்த 31 மாடி சுரங்க நிலையம் அமைக்கப்படவுள்ளது. அமைக்கவிருக்கும் நிலையம் பூமிக்கடியில் சுமார் 94 மீட்டர் ஆழம் வரை செல்லக் கூடியதாகும்.

சாலையில் இருந்து பூமிக்கு அடியில் அமையவிருக்கும் மெட்ரோ ரயில் நிலையம் செல்ல நகரும் படிக்கட்டுகள் (எக்ஸ்லேட்டர்) அமைக்கப்படுகின்றது. அதன் மூலம் பூமிக்கு அடியில் உள்ள ரெயில்வே பிளாட்பாரங்களுக்கு வெறும் 3 நிமிடத்தில் செல்ல முடியும்.

இந்த திட்டத்தின் மூலம் உலகில் உள்ள மிக ஆழமான மெட்ரோ ரயில் நிலையங்களில் இதுவும் ஒன்று என்ற பெருமையை இது பெறுகின்றது.

தற்போது, வடகொரியாவில் 110 மீட்டர் ஆழத்தில் மெட்ரோ ரெயில் நிலையம் ஒன்று செயல்பட்டு வருகின்றது. இதுவே முதன் முதலாக பூமிக்கு அடியில் அமைக்கப்பட்ட மிக ஆழமான மெட்ரோ நிலையம் ஆகும். மிகவும் ஆழமான மெட்ரோ நிலையம் என்ற பெருமையை இதுவரை தக்கவைத்து வருகின்றது.

ரயில் போக்குவரத்தில் சீனா அதிவேகமாக முன்னேறி வருவது அனைவருக்கும் தெரிந்த விசயம்தான். இருப்பினும், மீண்டும் மீண்டும் உலக மக்களுக்கு தங்கள் ஆற்றலை காட்டிவருகின்றது என்பது இதன்மூலம் தெரிகின்றது. மேலும் புல்லட் ரெயில், சுரங்க பாதை ரெயில், பறக்கும் ரெயில் எனவும் சாதனை படைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*