விடுதலை புலிகள் மீதான தடையை நீக்கியது ஐரோப்பிய ஒன்றியம்!

தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தினை பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலிலிருந்து நீக்குவதாக 28 நாடுகளை கொண்ட ஐரோப்பிய யூனியன் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2001-ஆம் அமெரிக்காவில் நடந்த இரட்டை கோபுர தாக்குதலுக்கு பிறகு அனைத்து போராட்ட இயக்கங்களையும் பயங்கரவாத அமைப்பென சித்தரித்தது அமெரிக்கா. அதன்படி கடந்த 2006-ஆம் ஆண்டு ஐரோப்பிய யூனியன் நீதிமன்றம் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பினை பயங்கரவாத அமைப்பு பட்டியலில் சேர்த்தது. மேலும் அவர்கள் போராட்டத்துக்காக சேர்த்து வைத்திருந்த வங்கி பணங்களையும் முடக்கியது. இதையடுத்து விடுதலை புலிகள் சார்பில் இந்த தடையை நீக்க வேண்டுமென்று 2011-ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. நெதர்லாந்தை சேர்ந்த விக்டர் கோப் என்ற வழக்கறிஞர் விடுதலை புலிகள் சார்பில் ஆஜராகி வாதாடினார். இதனையடுத்து கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் இந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது. மேலும் கடந்த 2004-ஆம் ஆண்டு சுனாமி வந்தபோது விடுதலை புலிகள் இயக்கம் மக்களுக்கு செய்த உதவிகள் போன்ற பல ஆதாரங்கள் ஐரோப்பிய யூனியன் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. மேலும் விடுதலை புலிகள் இயக்கம் மக்களின் விடுதலைக்காக போராடும் இயக்கம்தானேயொழிய அது பயங்கரவாத இயக்கம் இல்லை என்ற கூற்றும் வலுவாக தொடர்ந்து வைக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், இலங்கை அரசின் கடுமையான எதிர்ப்பையும் மீறி லக்சம்பெர்க் நாட்டில் அமைந்துள்ள ஐரோப்பிய யூனியன் நீதிமன்றம், பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலிலிருந்து விடுதலை புலிகளின் பெயரை நீக்குவதாக அதிரடியாக அறிவித்துள்ளது. தடையை நீக்குவதற்கு காரணமாக, கடந்த 2009-ஆம் ஆண்டுக்கு பிறகு விடுதலை புலிகள் எந்த தாக்குதல்களிலும் ஈடுபடவில்லையென்றும், விடுதலை புலிகள் தாக்குதல் நடத்துவதற்கான திறன் இருப்பது குறித்து எந்த ஆதாரமும் அளிக்கப்படவில்லையென்றும் கூறியுள்ளது. விடுதலை புலிகள் மீதான தடையை நீக்கியிருப்பதால் வங்கிகளில் முடக்கி வைக்கப்பட்டிருக்கும் பணம் அனைத்தும் விடுவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. ஐரோப்பிய யூனியன் நீதிமன்றத்தின் தீர்ப்பினால் தமிழக மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்திருக்கின்றனர். மேலும் இந்த தீர்ப்பினை அடிப்படையாக வைத்து இந்திய அரசும் விடுதலை புலிகள் மீதான தடையை நீக்க வேண்டுமென்ற கோரிக்கையும் வைக்கப்பட்டு வருகிறது.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*