நஷ்ட ஈடு வழக்கு தொடருவேன் : ரூபாவுக்கு சத்யநாராயணராவ் நோட்டீஸ்!

சசிகலாவுக்கு சிறையில் சலுகை  அளிக்கப்பட்டதற்கு தான் லஞ்சம் பெற்றதாக கூறியதற்கு டிஐஜி ரூபா  மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும், இல்லையென்றால் அவர் மீது நஷ்ட ஈடு வழக்கு தொடரப்படும் எனவும் டிஜிபி சத்யநாராயணராவ் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிறைத்துறை டி.ஜி.பி.யாக இருந்த சத்யநாராயணராவ் .2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றுக்கொண்டு சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகளை செய்து கொடுத்துள்ளதாக டி.ஐ.ஜி. ரூபா பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறினார். மேலும் இதுதொடர்பான 2 வீடியோக்களும் வெளியாகின. ரூபாவின் குற்றச்சாட்டை சத்யநாராயணராவ் முழுவதுமாக மறுத்தார். இந்த விவகாரம் குறித்து ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் தலைமையில் உயர்மட்ட குழு விசாரணைக்கு கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த குழு தனது விசாரணையை தொடங்கியுள்ளது. இதற்கிடையே ரூபா மற்றும் சத்யநாராயணராவ் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவிடம் லஞ்சம் பெற்றுக் கொண்டு அவருக்கு சிறப்பு சலுகைகள் செய்து கொடுத்ததாக என் மீது ரூபா புகார் கூறியதற்கு  மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் இல்லையேல் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடருவேன் என்றும் முன்னாள் சிறைத்துறை  டிஜிபி சத்யநாராயணராவ் ரூபாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். சசிகலாவின் தீவிர ஆதரவாளரான அதிமுக அம்மா அணியின் கர்நாடகா மாநில செயலாளர் புகழேந்தியும் டிடிவி தினகரன் சார்பில் அடுத்த வாரம் ரூபா மீது மானநஷ்ட வழக்கு தொடரவிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*