பீகார் துணை முதல்வர் பதவி பாஜகவுக்கு!

லாலு கூட்டணியை உடைத்து வெளியேறிய நிதிஷ்குமார் பாஜக ஆதரவுடன் இன்று முதல்வராக பதவியேற்றார். இதுவரை லாலுவின் மகன் பொறுப்பு வகித்த துணை முதல்வர் பதவி பாஜகவுக்கு வழங்கப்பட்டுள்ளது. துணை முதல்வராக பாஜக தலைவர் சுஷில்குமார் மோடி பதவியேற்றார். தலித் சமூகத்தைச் சார்ந்த சுஷில் குமார் மோடிக்கு துணை முதல்வர் பதவி வழங்கியிருப்பதன் மூலம் தலித் மக்களின் வாக்குகளை பாஜக பெற்றுக் கொள்ளும் என நம்புகிறது.

பீகாரில் பாஜகவுக்கு 53 உறுப்பினர்களும், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனாதா தளத்திற்கு 71 உறுப்பினர்களும், லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளத்துக்கு அதிகபட்சமாக 80 எம்.எல்.ஏக்களும் உள்ள நிலையில் லாலுவின் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு 27 எம்.எல். ஏக்களும் உள்ளனர். சட்டமன்றத்தில் தனிப்பெருன்பான்மையை நிரூபிக்க 122 எம்.எல்.ஏக்கள் தேவை எனும் நிலையில் பாஜக ஆதரவோடு பதவியேற்றுள்ள நிதிஷ்குமாருக்கு 124 உறுப்பினர்களின் பலம் உள்ளது. ஆனால் லாலு பிரசாத்தின் கட்சிக்கு காங்கிரஸ் அதரவளித்தாலும் அதன் பலம் வெறும் 107 தான். ஆனால் தனிப்பெரும் கட்சியாக அதிக எண்ணிக்கைகளைக் கொண்ட ராஷ்டிரிய ஜனதா தளத்தையே கவர்னர் ஆட்சியமைக்க அழைத்திருக்க வேண்டும் எனும் நிலையில் பாஜக ஆதரவாளரான கவர்னர் ராஜிநாமா செய்த் நிதிஷ்குமாரையே ஆட்சியமைக்க அழைத்து பெரும்பான்மையை நிரூபிக்க இரண்டு நாள் கால அவகாசமும் கொடுத்துள்ளார். தமிழகத்தின் தினகரனை கைது செய்து முடக்கி அதிமுகவை அபகரிப்பது போல லாலுவின் குடும்பத்தின் அடுத்தடுத்து கைதுகள் இருக்கலாம், லாலுவின் கட்சிக்குள் உடைப்பை ஏற்படுத்த அவரது குடும்பத்தின் மீது அதிரடி தாக்குதல்களும் கைதுகளும் விரைவில் இருக்கும்!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*