தமிழ் உட்பட 12 மொழிகளுக்கான அகாடமி அமைக்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்!

ஒரு தேசம், ஒரு மொழி, ஒரு மதம், ஒரே பண்பாடு என்ற ஒற்றை ஆதிக்க சிந்தனையின் அடிப்படையில் இந்தி, இந்து,இந்தியா என்ற கோட்பாட்டை மத்திய அரசு சகல துறைகளிலும் செயல்படுத்தி வரும் நிலையில் இந்தியாவின் பன்மைத்துவத்தை பாதுகாக்கும் வகையில் தமிழ் உட்பட 12 மொழிகளுக்காக பிராந்திய மொழி அகாடமியை டெல்லி அரசு சார்பில் உருவாக்குகிறார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.

12 பிராந்திய மொழிகளுக்கான அகாடமி துவங்குவதற்கான திட்ட வரைவை துவங்குமாறு அம்மாநில கலை, கலாச்சாரம் மற்றும் மொழி துறைக்கு துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியா உத்தரவிட்டு உள்ளார். தமிழ், பெங்காலி, குஜராத்தி, மராத்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஒடியா, அசாமி, கர்வாஹலி, குமாவோனி, ஜான்சாரி, காஷ்மீரி மற்றும் மார்வாடி , சமஸ்கிருதம் என 12 மொழிகளுக்கான மையமாக இப்போதைக்கு இம்மையம் துவங்கப்பட இருக்கிறது.டெல்லியில் பதவியேற்ற ஆம் ஆத்மி அரசு மொழிகளை பாதுகாக்கும் வகையில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவித்திருந்த நிலையில் இப்போது அந்த திட்டத்திற்கு செயல் வடிவம் கொடுக்கிறது.

டெல்லி ஆம் ஆத்மி அரசு ஏற்கனவே தன்னுடைய பட்ஜெட்டில் மாநிலத்தில் பல்வேறு அகடாமிகள் தொடங்கப்படும் என தெரிவித்து இருந்தது. டெல்லி மக்களிடையே சமஸ்கிருத மொழியை பிரபலப்படுத்தும் வகையில் டெல்லி அரசு நேற்று டெல்லி முழுவதும் 75 சமஸ்கிருத மொழி கற்றுக் கொடுக்கும் மையங்கள் திறக்கப்படும் என அறிவித்தது.

1 Comment

  1. இந்தியா துண்டுதுண்டாக உடையக்கூடாது எனும் விருப்பம் நிறைவேறக்கூடும் என்ற நம்பிக்கையை உண்டாக்கும் தகவல். அனைவரும் படித்து மகிழ்வோம். ஒவ்வொருவரும் தத்தமக்காகப் போராடும் அதேவேளை அனைவரும் அனைவருக்காகவும் போராடுவோம்.

Leave a Reply

Your email address will not be published.


*