ஒரே இன்னிங்ஸில் மூன்று சாதனை படைத்த கோஹ்லி

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் கோஹ்லி ஒரு இன்னிங்ஸில் மூன்று சாதனை படைத்து கலக்கியுள்ளார்.

இலங்கையின், காலே மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்ஸில் விளையாடிய இந்திய அணி 240 ஓட்டங்களுக்கு டிக்ளர் செய்தது. அதில் இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி சதமடித்து அசத்தியுள்ளார். இதையடுத்து இலங்கை அணிக்கு 550 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இந்த இன்னிங்ஸில் இந்திய அணித்தலைவர் கோஹ்லி மூன்று சாதனைகளைப் படைத்துள்ளார்.

அதன்படி, வெளிநாட்டுத் தொடர்களில் வேகமாக 1,000 ஓட்டங்களை கடந்த இந்திய அணித்தலைவர் என்ற சாதனையை கோஹ்லி படைத்துள்ளார். அவர் 17 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையைப் படைத்துள்ளார், இதன் மூலம் அவர் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்துள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் கோஹ்லி அடிக்கும்17-வது சதம் இதுவாகும். மேலும், அணித்தலைவராக அவர் அடிக்கும் 10-வது சதமாகும். அதிவேகமாக 10 சதங்கள் அடித்த அணித்தலைவர்கள் பட்டியலில் கோஹ்லி 5-வது இடம் பிடித்துள்ளார்.

இந்த சதம் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அவரது சராசரி 50 சதவீதமாகியுள்ளது. அதுமட்டுமின்றி டெஸ்ட், ஒருநாள், டி 20 என்று அனைத்து விதமான கிரிக்கெட்களிலும் 50 சராசரியை வைத்துள்ள ஒரே வீரர் என்ற பெருமையை கோஹ்லி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*