”சூரியமீன்’’- அரியவகை மீன் கண்டுபிடிப்பு

முதன் முறையாக 130 வருடங்களுக்கு பின்னர் ’’சூரியமீன்’’ எனப்படும் ஒரு புதிய வகை இன மீன் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த மீன் இனமானது நீண்டகாலமாக உயிரின வகைப்படுத்தலில் இருந்து நழுவி வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Hoodwinker Sunfish (Mola tecta) என அறிவியல் பெயரிடப்பட்டுள்ள நிலையில் நியூசிலாந்து, சிலியின் தென் பகுதி, தென் ஆப்பிரிக்கா மற்றும் அவுஸ்திரேலியாவின் தென்கிழக்கு பகுதி ஆகிய பகுதிகளில் இந்த மீன்வகைகளைக் காணலாம்.

அதன்பின்னர், பல தசாப்தங்களுக்குப் பின்னர் தற்பொழுது தான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 3 மீட்டர்கள் வரை வளரக்கூடிய இந்த சூரியமீன்கள் சுமார் 5000 பவுன்ஸ் எடை கொண்டவையாகும்.

பத்து வருடங்களுக்கு முன்னர் ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் சிலர் சன்பிஸ் வகைக்குரிய சில மரபணுக்களை ஆஸ்திரேலிய கடற்பரப்பில் இருந்து சேகரித்திருந்தனர். அதனை வைத்துத்தான் இந்த மீன்கள் தற்பொழுது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவரை 3 சூரியமீன்களின் இனவகைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் மீதமிருக்கும் 1 வகை மீன் (Mola tecta) பற்றி ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.

இவற்றின் உடலமைப்பு சுறா போன்று காட்சியளிப்பதால் சிலநேரங்களில் இவை மீனவர்களால் வேட்டையாடப்பட்டும் உள்ளது. உண்மையில், இந்த சூரியமீன்கள் பெயரிக்கேற்ப சூரிய ஒளியில் குளித்தலை (Sunbath) மிகவும் நேசிப்பவையாம். அதாவது, எப்பொழுதும் கடலின் மேற்பரப்பில் வந்து தங்களது உடம்பில் சூரியக் கதிர்களை பட வைத்துக்கொள்ளும். அத்துடன், இவை ஆபத்தான் மீன்கள் அல்ல என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*