தலித் காதலர்கள் வன்கொடுமை: வருத்தமும் விளக்கமும்!

நேற்று எங்கள் தமிழரசியல் வலைதளத்தில்,தலித் காதலர்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட வீடியோ செய்தியை வெளியிட்டிருந்தோம். அது முக நூல் வலைத்தளத்தில் இருந்து எடுக்கப்பட்டது. இந்த வீடியோவில் இது உபி-யில்  நடத்தப்பட்ட கொடுஞ்செயல் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்படி எங்கள் செய்தியும் வெளியிடப்பட்டது.பொதுவாகவே சமூக வலைத்தளங்கள் ஒரு நிமிடத்திற்கு ஆயிரக்கணக்கான தகவல்களைக் கொட்டுகின்றன. அதில் நமக்கு பயனுள்ள தகவல்களும் உண்டு என்கிற அடிப்படையில் இச்செய்தியின் உறுதியை  சோதிக்காமல் வெளியிட்டோம்.   ஆக இந்த வீடியோ பொய்யா என்றால் நிச்சயம் இல்லை. இதுதான் இன்றைய இந்தியாவில் தலித்  மற்றும் முஸ்லீம் மக்களுக்கு நடந்து கொண்டிருக்கிறது.

வீடியோ அடங்கிய செய்தி  http://bit.ly/2vUCTfz

ஆனால் தொடர்புடைய வீடியோ எங்கே எந்த மாநிலத்தில் நடந்தது என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை. இந்தக் கொடுமை நடந்தது உண்மை. சிலர்  ராஜஸ்தானில் சில மாதங்களுக்கு முன்னர் நடந்ததாக வேறு ஒரு  வீடியோவைக் கொடுத்தார்கள்.ஒவ்வொரு வீடியோவையும் எடுத்து அதை பிரேம் பை பிரேம் ஆய்வு செய்த போது அது வேறு  கொடுமை, இது வேறு கொடுமை என்ற முடிவுக்கு வந்தோம். ஆக மொத்தம் பிரித்தறிய முடியா வண்ணம் இக்கொடுமைகள் இந்தியாவில் நடந்து கொண்டிருக்கிறது.  இதற்கு உதாரணமாக, உறுதி செய்யப்பட்ட சில தகவல்களை உங்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்புகிறோம்.

803 பாலியல் வன்முறைகள், 729 கொலைகள்: யோகியின் இரு மாத ஆட்சி!

\\உத்திர பிரதேச மாநிலத்தின் முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவியேற்ற இரண்டு மாத காலத்தில், 803 பாலியல் வன்முறைகள், 729 கொலைகள் நடந்துள்ளதென

அம்மாநில சட்டமன்றம் தகவல் தெரிவித்துள்ளது.//

http://bit.ly/2ugxLDK

இந்தியா டுடே இதுபற்றி வெளியிட்ட செய்திக்கான இணைப்பு

http://bit.ly/2hfP6Iw

ராஜஸ்தான் மாநிலத்தில் நிர்வாணமாக்கப்பட்டு காதல் ஜோடியை ஊர்வலமாக அழைத்துச் சென்ற செய்தி

http://bit.ly/2f0y7t1

உத்தர பிரதேச மாநிலத்தில் காதல் ஜோடிகள் கொடூரமாக தாக்கப்பட்ட செய்தி

http://www.deccanherald.com/content/623573/shocking-details-emerge-lovers-brutalisation.html

தலித், பழங்குடி மற்றும் இஸ்லாமிய மக்களுக்கு தொடர் வன்கொடுமைகள் இழைக்கப்பட்டுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*