பாகுபலி தேவசேனாவின் வில்வித்தை தமிழர்களுடைய போர்முறை!!

பாகுபலி படத்தில் தேவசேனா ஒரே வில்லில் மூன்று அம்புகள் எய்வதுபோன்ற காட்சிகள் 13, 14 வது நூற்றாண்டில் நடந்த போர் யுக்திகளில் தமிழர்கள் பயன்படுத்தியுள்ளனர் என்பதற்கான வரலாற்று சான்று கிடைத்துள்ளது.

பாகுபலி திரைப்படத்தின் முக்கிய கதாநாயகியான அனுஷ்கா(தேவசேனா) ஒரே வில்லில் 3 அம்புகள் எய்வது போன்று ஒரு காட்சி அமைக்கட்டிருந்தது. இப்படி 3 அம்புகளை ஒரு வில்லில் எய்ய முடியுமா? அத்துடன், குறிப்பிட்ட இந்த காட்சி பட இயக்குனர் ராஜமௌலிக்கு புதிதாக தோன்றியதா? என பல கேள்விகள் வெளிவந்தன. அத்துடன், இந்தப் படம் வெளியான போது அவ்வாறு ஒரு போர் வீரனால் சண்டையிட இயலாது என்றும் அது இயக்குநரின் கற்பனையே என்றும் பலர் விமர்சித்திருந்தனர்.

இந்தக் காட்சியைப் பார்க்கும் பொழுது கண்டிப்பாக இது ஒரு பழங்கால போர் யுக்தி எனத் தெரிகின்றது.

அதற்கேற்பவே, தமிழ் நாட்டு எல்லையில் இருக்கும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மூன்று பழமையான கற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்தக் கற்களில் ஒரே வில்லில் மூன்று அம்புகளை வைத்திருக்கும் போர் வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

ஆனால் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட இந்த பழமை வாய்ந்த கற்களில் போர் வீரர்கள் ஒரே அம்பில் மூன்று வில்களை விடுவது போல் சிற்பிகளால் செதுக்கப்பட்டிருக்கின்றது.

கைப்பற்றப்பட்ட 3 கற்களும் கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று மையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இம்மூன்று கற்களையும் கண்டறிந்தவர் இம்மையத்தின் தலைவர் அரம் ஏ.கிருஷ்ணன் ஆவார். இவர் கூறுகையில், ‘’இந்த 3 கற்களைகளையும் ஆராய்ந்து பார்க்கும் பொழுது, இவை நம் தமிழ் வீரர்களின் பழங்கால போர் யுக்தி எனத் தெரியவருகின்றது. ஏனெனில், எதிரிகளை எளிதில் வெல்ல ஒரு வீரனோ அல்லது வீராங்கனையோ ஒரு வில்லில் 3 அம்புகளை எய்திருக்கலாம். இவை கிடைத்தது தமிழுக்கு மிகப்பெரிய பெருமையாகும்’’ எனத் தெரிவித்திருந்தார்.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*