அணைந்தது கியாஸ் அடுப்பு!

சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியத்தை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ரத்து செய்ய மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.சிலிண்டருக்கான விலையை மாதம் தோறும் ரூ. 4 உயர்த்தவும் திட்டமிட்டு உள்ளது.
மானிய விலையில் மக்கள் கியாஸ் சிலிண்டர் வாங்கி வந்த நிலையில் இனி மானிய விலையில் சிலிண்டர் கிடைக்காது எனக் கூறிய மத்திய அரசு மானியங்களை வங்கிக் கணக்கில் செலுத்த ஆதார் எண்ணும் வங்கிக் கணக்கும் அவசியம் என்றது. இப்படி சிலருக்கு மட்டும் வங்கிக் கணக்கில் பணம் போடப்பட்டு வந்த நிலையில் மொத்தமாக சிலிண்டருக்கான மானியத்தை ரத்து செய்துள்ளது மோடி அரசு.
முதலில் ஆதார் இருந்தால்தான் மானியம் என்று சொன்ன அரசு இப்போது மொத்தமாக அடுப்பையே அணைத்து விட்டது. இனி மாதா மாதம் சிலிண்டர் விலையும் கூடிக்கொண்டே போகும். ஜி.எஸ்.டி வரி விதிப்பால் அனைத்து பொருட்களின் விலைகளும் கணிசமாக உயர்ந்துள்ள நிலையில் சிலிண்டருக்கும் பெரும் பணம் செலவு செய்ய வேண்டியிருக்கும்.
மம்தா பானர்ஜி
மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, பாரதீய ஜனதா அரசு பணம் குறித்தே கவலை கொள்கிறது என விமர்சனம் செய்து உள்ளார். இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டு உள்ள செய்தியில், நான் உண்மையில் சாமானியர்கள் பற்றி கவலை கொண்டு உள்ளேன். முன்னதாக சமையல் எரிவாயு சிலிண்டர் மானியம் திரும்ப பெறப்பட்டது, இப்போதும் நடந்து உள்ளது. பாரதீய ஜனதா மக்களை பற்றி கவலைக் கொள்வது கிடையாது. அவர்களுடைய கவலை அனைத்தும் பணம் குறித்தே உள்ளது.

 

பாரதீய ஜனதா அதனுடைய சமூக பொறுப்பை எப்படி தட்டி கழிக்கலாம்? ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் அவர்களுடைய பொறுப்பு எங்கே? பாரதீய ஜனதா அனைத்து நிலையிலும் தன்னுடைய பொதுக் கடமையில் இருந்து விலகி செல்கிறது என குறிப்பிட்டு உள்ளார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*