டிஜிட்டல்வாசி : நீட், ஜி.எஸ்.டி, ராமர் பாலம், துவாரகை எல்லாம் இருக்கு….மானியம் மட்டும் இல்லை!

வறுமையை இந்த நாட்டிலிருந்து ஒழிப்பதற்கு பதில் வரிசையாக வறுமையில் வாடிக் கொண்டிருக்கும் மக்களை ஒழித்து வருகிறது நம் மத்திய அரசும் மாநில அரசும்… அதன் வெளிப்பாடுகள் பணமதிப்பு இழப்பிலிருந்து தொடர்ந்து வருகிறது. நாமும் எவ்வளவோ பண்ணியாச்சு இத பண்ணமாட்டமா என்கிற நிலைமைக்கு வந்துட்டோம்… வாங்க பாப்போம் நம்ம நெட்டிசன்கள் என்ன சொல்லியிருக்காங்கனு…

@ஆதிரா ஆனந்த்
– ஃப்ரிட்ஜ் இருந்தா ரேஷன் பொருள் கிடையாது..
– கேஸ் சிலிண்டருக்கு மானியம் கிடையாது..
– எஸ்.பி.ஐ-ல போடுற பணத்துக்கு 3.5 சதவீதம் வட்டி..
– மருத்துவ சேர்க்கையில தமிழக மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடையாது..
இதெல்லாம் இன்னைக்கு ஒரு நாளைக்கு மட்டும் வந்த நியூஸ்…. செத்துருங்கடானு சொல்லாம சொல்றாங்க.

@சித்தன் ஆனந்த்குமார்
வெஸ்டர்ன் டாய்லெட் இருந்தால் ரேஷன் இல்லை..
எடப்பாடி அதிரடி .

@Viji Narasimhan
??????சமையல்சிலிண்டர்
மானியம் 2018மார்ச்-3முதல்
ரத்து …
நல்ல இருக்கு டா உங்க பார்முலா …
ஆட்சி முடிவதற்குள்
இந்தியாவில்
ஏழைகளே இருக்கமாட்டார்கள் தானே சொன்னீங்க , இப்பதான் புரியுது
ஏழைங்க உசுரேட இருக்க மாட்டங்க போல

@Kartik Raj P
நிறைய குடும்பங்கள் சிலிண்டர் விபத்தில் இறந்துள்ளனர்.. சிலிண்டர் உபயோகிப்பதை தடுத்து அழிவுபாதையில் இருந்து மக்களை காக்கவே மானியம் ரத்து செய்யபட்டுள்ளது – தமிழிசை..
அடிக்கடி ஏற்படற விமான விபத்துல நெறைய பேரு சாகறாங்க.. அதுக்காக மோடி விமானத்துல போகாம இருப்பாரா?!

@சித்தன் ஆனந்த்குமார்
பிரிட்ஜ் இருந்தா., மூணு ரூம் மேல இருந்தா.,
கார் இருந்தா ரேஷன் இல்லையாம்..!
சரி வெண்ணைகளே..
எனக்கு ஒரு 2 BHK வீடு , ஒரு காரு, ஒரு டபுள் டோர் பிரிட்ஜ் மூணையும் வாங்கி கொடுத்துட்டு
நீ ரேசனை கட் பண்ணிக்கோ !! அதானே நியாயம் !

@Mani Dhanuskodi
நீட் இருக்காம்
ஜி எஸ் டி இருக்காம்
ராமர் பாலம் இருக்காம்
அயோத்தியல் ராமர் பிறந்த இடம் இருக்காம்
துவாரகை கூட இருக்காம்
மானியம் இல்லையாம்!

 

 

 

 

 

 

 

 

@Venba Geethayan
ரேஷன் அட்டைகளை smart cardஆக மாற்றி தடை செய்தாகிற்றா?

@Venkat Guru
இந்த மாதிரி மொக்க காமடி அடிச்சு ஸ்டேட்டஸ் போட்டாலும் ரேஷன் கார்ட் கிடையாதாம்

@Sivakumar Venkatachalam
மோடியின் சுயரூபம் – முழுசா மாறின சந்திரமுகியே பார்

@Gowri Sankar
கோமாதா கோமியம் குடிக்காதவர்களுக்கு ரேசன் இல்லை…

@Bhavani Chithravel
ஏம்பா நாலு ஜோடி செருப்பு வச்சிருக்கேன் … ரேஷன் கார்டு இருக்கா இல்லையா ?? ?
#செப்பல்_பதிவு

@Arun Pandiyan
ரேசன் கார்ட்ட அடமானம் வச்சு குடிக்கிறானுங்கனு , எல்லார் ரேசன் கார்ட்டையும் வாங்கி பாதிரியார் கிட்ட விஜய் கொடுக்குற மாதிரி ஒரு சீன் வரும்… எல்லாரும் அப்ப பல்ல காட்டுனாங்க?
ராஜ்குமார் ஒரு தீர்க்கதரிசி??

@தோணி கௌதம்
கேஸ் இல்லனா விறகு வேணும் விறகு வேணும்னா கருவேல மரத்தைலாம் வெட்டனும்.. இப்ப புரிஞ்சுதா கருவேல மரத்தை ஒழிக்கத்தான் இந்த ப்ளானேனு??

 

 

 

 

 

@Karthikeyan Maddy
உங்கூட்ல கேஸ் ஸ்டவ் இருக்கி.. சோ… சிலிண்டர் கெடயாது.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*