பிக் பாஸ்: ஓவியா vs பிந்து மாதவி

காயத்ரி திடீர் நல்லவராக மாறியதில் அல்லது காட்டப்பட்டதில் விஜய் டிவிக்கோ கமலுக்கோ எந்தவித அதிர்ச்சியும் இல்லை. ஆனால் மக்கள் பலரும் அதில் அதிருப்தியில் இருந்தனர். என்னடா இது ஓவியாவின் முக்கிய எதிரியே அவருக்கு தோழியாகி விட்டார் என மக்கள் நினைத்திருந்த வேளையில், நான் அப்படியெல்லாம் இல்லைனு மீண்டும் ஓவியா பற்றி கிசுகிசுக்க துவங்கினார் காயத்ரி.
இந்நிலையில் கடந்த ஞாயிறு அன்று புது போட்டியாளராக நடிகை பிந்து மாதவி உள்ளே நுழைகிறார். இவரது வருகை ஓவியாவுக்கு கடும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஓவியா ஆர்மியில் இருந்த சிலர் பிந்து பக்கம் தாவுவதை சமூக வலைதளங்களில் காண முடிந்தது. பிக் பாக்ஸ் ஹவுஸில் நழைந்த பிந்துவுக்கு நேற்றுதான் முதல்நாள். என்ன நடக்கப்போகிறது என அனைவரும் ஆவலாக காத்திருந்தனர். பிந்துவுக்கும் ஓவியாக்கும் முட்டிக் கொண்டால் பரபரப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக இருந்தது. அப்போதுதான் எவிக்சன் (பிடிக்காதவர்களை வெளியேற்ற பரிந்துரை) செய்வதற்காக பிந்து மாதவி முதல் நபராக அழைக்கப்பட்டார். இதில் ஓவியா பெயரை பிந்து மாதவி பரிந்துரை செய்திருந்தால், இவர்களின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் சண்டையிடுவது நிச்சயம் என்ற சூழல் ஏற்பட்டது.
ஆனால், பிந்து பரிந்துரை செய்த முதல் நபர் ஜூலி, இரண்டாவது நபர் காயத்ரி, இந்த இருவரின் நடவடிக்கைகளும் முந்தைய நிகழ்ச்சியில் சரியில்லை என்பதை காரணமாக சொல்லி பரிந்துரை செய்தார். இதனால் பிந்து மாதவிக்கு மக்கள் ஆதரவு அதிகமாகியுள்ளது. பிந்து, ஓவியாவுக்கு சரியான போட்டியாக அமைவார் என்பதில் சந்தேகமில்லை. எனினும் ஓவியாவுக்கு மக்கள் மத்தியில் இருக்கும் ஆதரவு குறையவில்லை.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*