பெண்களுக்கான ஸ்பெஷல் ‘பீர்’!

”Aurosa for her” எனப் பெண்களுக்காக ஸ்பெஷல் பீர் ஒன்றை செக் குடியரசைச் சேர்ந்த பீர் நிறுவனம் ஒன்று தயாரித்துள்ளது.

முதன்முறையாக பெண்களுக்காக ஸ்பெஷல் பீர் தயாரிக்கப்படுவதனால், அதனை “First Beer for her (அவளுக்கு முதல் பீர்)’’ எனக் குறிப்பிட்டு வெளியிட்டுள்ளனர்.

இந்த ஸ்பெஷல் பீர் பிங் நிற பாட்டில்களில் அடைக்கப்பட்டு விற்பனைக்கு அனைத்து மதுபானக்கடைகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இதுவரை தயாரிக்கப்பட்ட பீர்களில் இல்லாத ஒரு தன்மை ஒன்று இந்த பீரில் உள்ளது. அதாவது, பெண்களுக்குப் பிடித்தமான சில ஸ்பெஷல் பொருட்களை கூடுதலாக சேர்த்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த பீர் பெண்களின் மென்மைத்தன்மை, மற்றும் இயல்பு தன்மைகளை கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பீர் நிறுவத்தின் உரிமையாளர் ஒரு பெண் ஆவார். அதனால் தான் பெண்களுக்கான ஸ்பெஷல் பீரை தயாரித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*