ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சில குறிப்புகள்

‘’Live healthy, live longer’’ எனும் பழமொழியை நாம் அறிந்திருப்போம். ஆனால், நடைமுறையில் அதனை பின்பற்றியிருக்க மாட்டோம். ஆரோக்கியமான வாழ்க்கை வாழ நினைத்தால் மட்டும் போதாது. அதற்கேற்ப என்ன செய்ய வேண்டுமோ அதனையும் பின்பற்ற வேண்டும்.

ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள் கீழே கொடுப்பட்டுள்ள வழிமுறைகைளை பின்பற்றுங்கள், வாழ்க்கை வளமாக மாறும்…..

1) தினமும் ஒரு டம்ளர் மாதுளை ஜூஸ் குடித்தால் உடலில் ரத்த அழுத்தம், கொழுப்பு, நச்சுத்தன்மை என பல பிரச்சனைகளுக்குத் தீர்வாக இருக்கும்.

2) விட்டமின் பி-6 தர்பூசனியில் அதிகமாக இருக்கின்றது. இதனை தினசரி உணவில் எடுத்துக்கொண்டால் மனநலக் கோளாறு மற்றும் மூளை நரம்புகளில் பாதிப்பு உள்ளவர்கள், மன அழுத்தம், பயம் போன்ற பாதிப்புகளை தகர்க்கும்.

3) ஆப்பிள் தோலில் பெக்டின்(Pectin) என்ற வேதிப்பொருள் அளவுக்கதிகமாக இருப்பதால், தோலோடு சாப்பிட வேண்டும். பெக்டின் நம் உடலின் நச்சுக்களை நீக்குவதில் சிறந்தது.

4) பூண்டு நாம் தினம்தோறும் சாப்பிட்டு வந்தால் நம் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி வெகுவாக அதிகரிக்கும். வெள்ளை அணுக்கள் அதிகம் உற்பத்தியாவதோடு,புற்றுநோய் செல்கள் உருவாகாமலும் தடுக்கும்.

5) சிவப்பணு உற்பத்திக்கு புடலங்காய், பீட்ரூட், முருங்கைக்கீரை, அவரை, பச்சைநிறக் காய்கள், உளுந்து, துவரை, கம்பு, சோளம், கேழ்வரகு, பசலைக்கீரை போன்றவற்றை அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

6) பச்சைப் பயறு, மோர், உளுந்துவடை, பனங்கற்கண்டு, வெங்காயம், சுரைக்காய், நெல்லிக்காய், வெந்தயக்கீரை, மாதுளம் பழம், நாவற்பழம், கோவைக்காய், இளநீர் போன்றவை உடலின் அதிகப்படியான சூட்டைத் தணிக்கும்.

7) வெங்காயம், பூண்டு, சிறுகீரை, வேப்பிலை, மிளகு, மஞ்சள், சீரகம், கருப்பட்டி, வெல்லம், சுண்டைக்காய் வற்றல், செவ்விளநீர், அரைக்கீரை, எலுமிச்சை போன்றவை உடலில் உள்ள நச்சுத்தன்மை நீக்கும் உணவுகள் ஆகும்.

8) பொன்னாங்கண்ணிக் கீரையைத் துவையல் செய்து சாப்பிட்டு வந்தால், மூல நோய் தணியும். இந்தக் கீரையின் தைலத்தை தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால் கண் நோய்கள் நெருங்காது.

9) தினசரி சிறு துண்டு பைனாப்பிளை தேனில் ஊற வைத்து, அந்தத் தேனை இரண்டு வாரம் சாப்பிட்டால் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும்.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*