திருச்சி இரயில்வே பிளாட்பார்ம் டிக்கெட் 20 ரூபாய்!

மருந்துகளை பரிசோதிக்கும் சோதனைக் கூடம் போலாகி விட்டது தமிழகம், அரசு செயல் படுத்த விரும்பும் கேடு கெட்ட எல்லா திட்டங்களையும் தமிழகத்தில் பரிசோதித்துப் பார்க்க விரும்புகிறது. காரணம் இங்குள்ள அடிமை அரசு.

தமிழகத்தின் ரயில்பாதைகளின் மத்தியில் அமைந்துள்ள ஜங்சன் தான் திருச்சி.எனவே இங்கு பயணிகளின் எண்ணிக்கை எப்பொழுதும் அதிகமாக இருக்கும். பிளாட்பாரங்களிலும் பயணிகள் எண்ணிக்கை நிறைவாக இருந்துகொண்டே இருக்கும்.ஏனெனில் வேளாங்கண்ணி, ஶ்ரீரங்கம், திருவானைக்காவல், மலைக்கோட்டை, கும்பகோணம் என ஆன்மிக பயணங்களுக்கும் திருச்சி வழியே செல்ல வேண்டும் என்பதால், திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் எப்போதும் பயணிகளின் எண்ணிக்கை கூடுதலாகவே இருக்கும்.

இந்நிலையில் திருச்சி மட்டுமல்லாமல், வேளாங்கண்ணி, நாகப்பட்டினம், திருவாரூர், கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர் உள்ளிட்ட திருச்சி சுற்றியுள்ள ரயில் நிலையங்களில் பிளாட்பாரம் டிக்கெட்டுகளின் விலையை இரண்டு மடங்காக உயர்த்தி மக்களுக்கு அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது மத்திய அரசு. தற்போது பிளாட்பாரம் டிக்கெட்டின் விலை 20-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், திருச்சியைத் தவிர்த்த மற்ற பகுதிகளில் உள்ள ரயில் நிலையங்களில் வருகிற 15-ம் தேதியில் இருந்து ரயில்வே பிளாட்பாரம் டிக்கெட் விலை உயரவிருக்கிறது.

இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதற்கு அவர்கள் கூறும் காரணம் தான் வேடிக்கையாக உள்ளது. அதாவது, பிளாட்பாரங்களில் பயணிகள் மற்றும் அவர்களுடன் வருவோரைத் தாண்டி நிறைய கூட்டம் இருக்கிறது என்கின்றனர் திருச்சி வட்டாரத்தைச் சேர்ந்த ரயில்வே அதிகாரிகள். பிளாட்பாரத்தில் பயணிகளைத் தவிர்த்து இருப்பவர்களைஎல்லாம் வராமல் தடுக்க இவர்கள் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காக இப்படியா? பயிரை காவல் காக்க ஆடுகளை வெட்டும் கதையாக உள்ளது.

ஏற்கனவே டீமானிட்டைசேசன், ஜி.எஸ்.டி, ரேஷன்னு விவசாயிகள் முதற்கொண்டு ஏழைகள்ட்ட இருந்து எல்லாத்தையும் புடுங்கி மக்களை நடுத்தெருவில் விட்டாச்சு. இன்னும் மீதியிருக்க கொஞ்ச நஞ்சத்தையும் எப்படி புடுங்கலாம்னு யோசிச்சுட்டுருக்கு மத்திய மாநில அரசுகள். அதற்கான அடுத்த கட்ட முயற்சிகளின் ஆரம்பமே இது போன்ற செயல்களெல்லாம் போல.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*