அரசு பள்ளியில் கழன்று விழுந்த மின்விசிறி:மாணவர்கள் காயம்!

திருவொற்றியூர் சத்தியமூர்த்தி நகரில் அமைந்துள்ள மாநகராட்சி பள்ளியில் சுமார் 200 சிறுவர் சிறுமியர் படித்து வருகின்றனர். அங்கு சுமார் 20 மாணவர்கள் இருந்த ஒன்றாம் வகுப்பு அறை ஒன்றில் அறையில் ஓடிக் கொண்டிருந்த மின்விசிறி கழன்று விழுந்துள்ளது. நல்ல வேலையாக சிறுவர் சிறுமியர் யார் மீதும் விழவில்லை.

ஆனால் சுற்றிக் கொண்டிருந்த மின்விசிறியின் இறக்கைகள் வெட்டியதால் மாணவி மோனிஷா மற்றும் மாணவன் கணேஷ் ஆகிய இருவருக்கும் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து இருவரும் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கூட்டிச் செல்லப்பட்டனர். அங்கு மோனிஷாவுக்கு மின்விசிறியால் கன்னத்தில் உண்டான வெட்டுக்கு தையல் போடப்பட்டது.

பின்னர், தகவலறிந்த அவர்களது பெற்றோர் மட்டுக்குமன்றி அனைத்து குழந்தைகளின் பெற்றோரும் பள்ளிக்கு வந்து ஆசிரியர்களிடம் வாக்குவாதம் செய்துள்ளனர். ஏற்கனவே முறையான பராமரிப்பில்லாத அரசு பள்ளிகளில் உண்டான பல விபத்துக்களை நாம் பார்த்தும் அறிந்தும் இருக்கும் போது மேன்மேலும் இது போன்ற விபத்துக்கள் அரசின் மீதான நம்பகத்தன்மையை குறைப்பதாகவே இருக்கின்றன.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*