பாகிஸ்தான் அரசு இணையத்தில் இந்திய தேசிய கீதம்!

பாகிஸ்தான் அரசு இணைய தளம் ஹேக்கர்ஸ்களால் முடக்கப்பட்டு அதில் இந்திய தேசிய கீதம் ஒலிக்கும் படி உருவாக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் இந்திய இணையதளங்களை கைப்பற்றிய மர்ம நபர்கள் அதில் பாகிஸ்தான் கொடியை பறக்கவிட்டனர். இந்நிலையில் டுவிட்டர் வாசிகளின் தகவலின்படி பாகிஸ்தான் அரசு இணையதளமான www.pakistan.gov.pk ஹேக்கிங் செய்யப்பட்ட செய்தியுடன் காணப்பட்டு உள்ளது.
மதியம் ஹேக் செய்யப்பட்ட இணையத்தை உடனடியாக சரி செய்தும் விட்டார்கள் என்றாலும் உடனே இணைய வாசிகள் சமூக வலைத்தளங்களில் இதை பரப்பி விட்டார்கள்.இந்தியர் குல்பூஷண் ஜாதவிற்கு மரண தண்டனை விதித்ததற்கு பதிலடியாக பாகிஸ்தான் அரசு இணையதளங்கள் முடக்கப்பட்டதாக பலரும் நம்புகிறார்கள்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*