பிக் பாஸ்: ஓவியா ஆர்மி கலைந்திடுமா?

பிக் பாஸ் வீட்டில் பிந்து மாதவி நுழைந்த பின் ஓவியாவின் கேரக்டர் மாறுவது போல் காட்டப்படுகிறது. ஆனால் ஓவியா தரப்பில் தவறு ஏதும் இருப்பதாக தெரியவில்லை. இந்த நிகழ்ச்சியின் துவக்கத்தில் ஓவியா ஆரவவை காதலிப்பதாக சொன்ன போது சிரித்து சினுங்கிக் கொண்டிருந்தவர், தற்போது தன்னை பாதுகாத்துக்கொள்ள நடிக்கிறார். ஓவியா  ஆரவ் முதுகில் கை வைத்தபோது, என்னை தவறாக நினைத்துவிடுவார்கள் என பொலம்பினார். ஆனால் நேற்று ஜூலி மசாஜ் செய்யும்போது அப்படி எதுவும் பேசவில்லை. ஆரவ் நாடகத்தின் உச்சகட்டம் என்னவென்றால், பிக் பாஸை அழைத்து ஓவியா எல்லை மீறுகிறார் என புகார் செய்ததுதான்.
ஆரவுக்கு ஆதரவாக ரைசா, ஓவியா செய்வது போல் ஒரு ஆண் போட்டியாளர் பெண்ணிடம் நடந்துகொண்டால் பெரிய பிரச்சனையாகிவிடும் என்றார். நேற்றைய நிகழ்ச்சி முழுவதும் ஓவியாவின் அழுகை காட்சிகளே அதிகம். ஓவியா- ஆரவ் இடையேயான காதலை வைத்து ஓவியாவின் ஒழுக்கம் குறித்த விவாதத்தில் சில கலாச்சார காவலர்கள் களமிறங்கியிருக்கிறார்கள். நீங்கள் இன்னும் ஓவியாவை ஆதரிக்கிறீர்களா? ( Do you still support oviya?) என்ற கேள்வியுடன் சில மீம்ஸ் வலம் வருவதை காண முடிகிறது. எனினும் ஓவியா ஆரமி இன்னும் ஓவியா பக்கமே நிற்கிறார்கள். பிந்து மாதவி, ஓவியா இடத்தை நிச்சயம் நிரப்ப முடியாது. அவரிடம் ஓவியா அளவு துறுதுறுப்பு இல்லை. பிக் பாஸ் நிகழ்ச்சியைவிட்டு ஓவியா வெளியேற்றப்பட்டால் அது அந்நிகழ்ச்சிக்கு மாபெரும் பின்னடைவை ஏற்படுத்தும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*