#oviya,biggboss,வைரலாகும் ‘நீங்க ஷட் அப் பண்ணுங்க’ ஆல்பம்!

விஜய் டிவி நடத்தும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் ஓவியா பேசும் ஒவ்வொரு விசயமும் சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. இதில் மிகவும் பிரபலமானது ‘நீங்க ஷட் அப் பண்ணுங்க’ (Neenga shut up pannunga). ஸ்நேகன் மற்றும் ஓவியாவுக்கு இடையேயான விவாதத்தில் மூக்கை நுழைந்த கஞ்சா கருப்பை பார்த்து ஓவியா சொன்னதுதான் ‘நீங்க ஷட் அப் பண்ணுங்க’. சில நாட்களில் இதை வைத்து பாடல் எழுதி ‘ஓவியா ஆன்த்தம்’ என்ற பெயரில் வெளியிட்டார்கள்.

தற்போது, ‘நீங்க ஷட் அப் பண்ணுங்க’  புதிய வெர்சன் ஒன்றுக்கு நடனமாடி வெளியிட்டிருக்கிறார்கள். ஓவியா பேசிய விசயங்களை ஒன்று சேர்த்து அரவிந்த் குமார் எழுதிய இந்த பாடல் வரிகளுக்கு கே சி பாலசாரங்கம் இசையமைத்திருக்கிறார். கவிதா கோபி இந்தப் பாடலை பாடியுள்ளார். இதற்கு ‘பாப் மாஸ்டர்’ சாம் பிரவின் குழு நடனமாடியிருக்கிறார்கள்.

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*