அரசுக்கு அப்பால் என் அப்பா: கமல்ஹாசன்

மெரீனா கடற்கரை காமராஜர் சாலையும் ராதா கிருஷ்ணன் சாலையும் சந்திக்கும் பகுதியில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு 8 அடி உயரத்தில் கம்பீர சிலை அமைக்கப்பட்டிருந்தது. இந்த சிலை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி 2006-ஆம் ஆண்டு ஜூலை 12-ஆம் தேதி திறந்து வைத்தார்.

அந்தப் பகுதியில் இந்த சிலை இருக்கும் காரணத்தால், அடிக்கடி விபத்துகள் நேர்கின்றன, எனவே இந்த சிலையை நீக்கவேண்டும் என நீண்ட காலமாக கூறப்பட்ட நிலையில் கடந்த புதன் (ஆகஸ்ட் 2) அன்று நள்ளிரவு 1 மணிக்கு சுமார் 50 ஊழியர்கள் சிவாஜி சிலையை இரவோடு இரவாக அகற்றத் தொடங்கினார்கள். பின்னர் அதிகாலை 4.30 மணியளவில் ராட்சத கிரேன் கொண்டு வரப்பட்டு, சிவாஜி சிலையை லாரியில் ஏற்றி அடையாறில் கட்டப்படும் மணிமண்டபத்திற்கு கொண்டு சென்றனர்

இந்நிலையில் இதுகுறித்து நடிகர் கமலாஹசன், “சிவாஜி ரசிகர் மனதிலும், நடிக்க நினைத்த தமிழன் மனதிலும் பதிந்தவர். இனி ஒரு சிலைசெய்வோம் அதை எந்நாளும் காப்போம், அரசுக்கு அப்பால் என் அப்பா” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*