இதய செயலிழப்புக்கு வழிவகுக்கும் ஆஸ்துமா

குழந்தைகளுக்கு சிறுவயதில் ஆஸ்துமா வருவதால் அவர்களின் முதிர்பருவத்தின் போது இதய செயலிழப்பு ஏற்படுவது உறுதி என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவின் லுசியானா நகரில் உள்ள பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள் குழு ’’சிறுவயது ஆஸ்துமா முதிர்காலத்தில் ஏதாவது பிரச்சினையை உடலில் ஏற்படுத்துகின்றதா’’ என்பதுபற்றி ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளார்கள்.

சிறுவயதில் குழந்தைகளுக்கு ஏற்படும் ஆஸ்துமா அவர்களது முதிர் பருவகால வயதில் அவர்களுக்கு இதய செயலிழப்பை ஏற்படுத்துகின்றது என்று இந்த ஆய்வின் முடிவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்துமா குறித்த இந்த ஆய்வு 1,148 பேரிடம் நடத்தப்பட்டது. ஆஸ்துமா வளரும் பருவத்தில் ஏற்படுவதால், இதயத்திற்குச் செல்லும் ரத்த நாளங்களின் வளர்ச்சி, இயங்குதிறனில் பாதிப்பை நிகழ்த்துகின்றது. இதன்மூலமாக, இதய தசை சுருங்கி விரிவடையும் திறனை இழக்க தொடங்குவதாகவும், முதிர் பருவத்தில் இதன் தாக்கம் அதிகமாக இருப்பதால், எளிதில் இதய செயலிழப்பு நிகழ்வதாகவும் ஆய்வு முடிவுகள் சுட்டிக் காட்டுகின்றன.

ஆய்வின்படி, 1990-ம் ஆண்டுகளுக்குப் பின் ஆஸ்துமா நோயினால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதய செயலிழப்பு ஏற்படும் முன்னர் அறிகுறிகளாக உயர் இரத்த அழுத்தம் அதிகமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*