இந்தியாவில் நெருக்கடி நிலை: லாலு!

பாஜகவுக்கு எதிராக மெகா கூட்டணி அமைத்து அதிக தொகுதிகளை வென்ற லாலு பிரசாத் யாதவ் தன்னை விட குறைவான தொகுதிகளை வென்ற நிதிஷ்குமாரை முதல்வராக்கினார். ஆனால் யாருக்கு எதிராக மெகா கூட்டணி துவங்கப்பட்டதோ அவர்களுடன் கூட்டணி சேர்ந்து லாலுவை கவிழ்த்தார் . இந்த கவிழ்ப்பு முயற்சிக்கு முன்னால் வருமானவரித்துறை உள்ளிட்ட விசாரணை அமைப்புகளை லாலு குடும்பத்தின் மீது ஏவி அவருக்கு நெருக்கடியைக் கொடுத்தார்கள். இப்போது பாஜக ஆதரவுடன் நிதிஷ்குமார் முதல்வராகி விட்டநிலையில் லாலு நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார் அப்போது:- “காங்கிரஸ் கட்சியை மிரட்டுவதற்காக வருமான வரித்துறை உள்ளிட்ட அரசின் விசாரணை அமைப்புகளை மோடி தவறாக பயன்படுத்துகிறார்.. பாரதீய ஜனதா தகவல்படி சொகுசு விடுதியில் 9 கோடி இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் அங்கு எதையும் கண்டுபிடிக்கவில்லை. ஆனால் பிரச்சாரங்களை மட்டும் திவீரமாக செய்கிறார்கள்.

பல்வேறு ஊழல் வழக்குகளில் தொடர்புடைய பாஜகவுக்கு நெருக்கமானவர்கள் நாட்டின் சுதந்திரமாக சுற்றி வருகிறார்கள்.‘பனாமா கேட்’ ஊழல் விவகாரம் எவ்வாறு வெளிப்பட்டது, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப் எப்படி பதவியை விட்டு நீக்கப்பாட்டார் .ஆனால் சர்வதேச புலனாய்வு செய்தியாளர் கூட்டமைப்பு வெளியிட்ட பனாமா லீக்ஸ் பட்டியலில் இடம் பெற்ற இந்தியர்கள் மீது இதுவரை விசாரணையே இல்லை. ஐஸ்வர்யா ராய், ராமன் சிங் மகன், அமிதாப் பச்சன் மற்றும் 424 பேரது பெயர்கள் அதில் இடம்பெற்று உள்ளது, ஆனால் இதுதொடர்பாக விசாரணை நடைபெறவே இல்லை,” என கூறிஉள்ளார்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*