நடுத்தர, ஏழை நாடுகளில் 80% பேர் புகைப்பழக்கத்துக்கு அடிமை!

உலக அளவில் புகைப்பழக்கத்திற்கு அடிமையான நபர்களில் 80 சதவீத மக்கள் இந்தியா போன்ற ஏழை மற்றும் நடுத்தர வருவாய்ப் பிரிவினர் அதிகம் வசிக்கும் நாடுகளில்தான் என புதிய ஆய்வுத் தகவல் வெளியாகியுள்ளது.

உலக சுகாதார அமைப்பால் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வின் முடிவில் வெளியிட்டுள்ள அறிக்கையில் இத்தகவல் கூறப்பட்டுள்ளது. ஒட்டு மொத்த உலகத்திலும் 110 கோடி மக்கள் புகைப்பழக்கத்திற்கு அடிமையாக உள்ளனர். புகைப்பழகத்திற்கு அடிமையானவர்களில் பலர் இளம் வயதினர் ஆவர். 15 வயதிலிருந்து 28 வயது வரை அடிமையானவர்களின் எண்ணிக்கை 60 சதவீதமாக உள்ளது.

மேலும், இந்த நபர்களில் 80 சதவீதம் பேர் இந்தியா, பிரேசில், நைஜீரியா போன்ற ஏழை, நடுத்தர வருவாய்ப் பிரிவு மக்கள் நிரம்பிய நாடுகளில்தான் வசிப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மக்களின் உடல்நலம், ஆரோக்கியம் தொடர்பான கொள்கைகளை வகுத்துச் செயல்படுத்துவதில் ஏழை, நடுத்தர நாடுகள் போதிய கவனம் செலுத்துவதில்லை. இதனால், அத்தகைய மக்கள் எளிதாக, புகைப்பழக்கத்திற்கு அடிமையாகின்றனர் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இதுவரை, கணக்கிடப்பட்டவரை ஆண்டுதோறும் 60 லட்ச மக்கள் புகைப்பழக்கம் காரணமாக உயிரிழக்கின்றனர். இதனை கருத்தில்கொண்டு, சர்வதேச சமூகம் புதிய விழிப்புணர்வு பணிகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*