மக்கள் வறுமையில் : எம்.எல்.ஏக்களுக்கு ஊதிய உயர்வு ஏன்? : உயர் நீதிமன்றம்!

சட்டமன்ற உறுப்பினர்களின் ஊதிய உயர்வை ரத்து செய்ய கோரிய மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் வரலாறு காணாத வறட்சி நிலவி வருகிறது. விவசாயிகள் தங்களது வாழ்வாதாரத்தை காப்பாற்ற டெல்லியில் சென்று போராடி வருகின்றனர். மேலும் தமிழகத்தில் பல்வேறு பிரச்னைகள் இருக்கின்றன. குடிநீர் பிரச்னை, நீட், கதிராமங்கலம், நெடுவாசல் என்று பெருமளவில் பிரச்னைகள் இருக்கிறது. தற்போதைய தமிழக அரசு இதனை கண்டுகொள்ளவில்லை. மாறாக போராடும் மக்களை அடக்குமுறை கொண்டு அடக்கி வருகிறது. மக்கள் வாழ்வாதாரத்தை உயர்த்தாத தமிழக அரசு எம்.எல்.ஏக்களுக்கு 55 ஆயிரம் ரூபாய் சம்பளத்திலிருந்து மானிய கோரிக்கை விவாதத்தின்போது சட்ட சபையில் எம்.எல்.ஏக்களின் ஊதியத்தை 1.05 லட்சமாக உயர்த்தி அறிவித்தார். முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் இந்த அறிவிப்பு பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியது.

இந்நிலையில், எம்.எல்.ஏக்களுக்கு வழங்கப்பட்ட சம்பள உயர்வை எதிர்த்து மதுரையை சேர்ந்த கே.ஏ.ரமேஷ் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஊதிய உயர்வு அறிவிப்பு அரசின் நிர்வாக ரீதியிலானது என்பதால் நீதிமன்றம் தலையிடாது என கூறி மனுவை தள்ளுபடி செய்தனர். ஆனாலும் தமிழக மக்கள் வறுமையில் வாடும்போது எம்.எல்.ஏக்களுக்கு ஊதிய உயர்வு தேவையா என கேள்வி எழுப்பினர் மேலும் விவசாயம், கடன் தள்ளுபடி, என பல்வேறு பிரச்சனைகளை தமிழக அரசு சந்தித்து வருவதாகவும் தெரிவித்தனர்.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*