ராஜிநாமா செய்கிறார் அமைச்சர் விஜயபாஸ்கர்!

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் தங்கியிருக்கும் காவிரி இல்லத்தில் தங்கியிருந்த அமைச்சருக்கு நெருங்கிய சிலர் நேற்றே காவிரி இல்லத்தை காலி செய்து விட்டு ஊருக்குச் சென்று விட்டார்கள்.

வருமானவரித்துறை ரெய்டை தொடர்ந்து நேற்று சம்மனுக்காக ஆஜரான அமைச்சரிடம் அதிகாரிகள் கேள்வி மேல் கேள்வி கேட்டு குடைந்திருக்கிறார்கள். தனது குவாரியில் அனுமதிக்கப்பட்ட அளவை விட கற்களை வெட்டியது. அதற்கு காட்டிய  கணக்கு, மனைவி பெயரில் உள்ள சொத்துக்கள். அனைத்தையும் பட்டியலிட்ட அதிகாரிகள் கடந்த தேர்தலில் கடன் இருப்பதாக கூறிய தகவல் குறித்தும் கேட்டனர். விசாரணைக்குப் பின்னர் வெளியில் வந்த அமைச்சரின் முகம் கறுத்துப் போய் இருந்தது.

நீட் தேர்வில் இருந்து விலக்குக் கோரும் நடவடிக்கைகள் முடங்கி விட்டன. அவர் ராஜிநாமா செய்ய வேண்டும் என்றுஎதிர்க்கட்சித்தலைவர் கோரிக்கை விடுத்திருக்கிறார். எடப்பாடி பழனிசாமியும், அமைச்சர் ஜெயக்குமாரும் விஜயபாஸ்கர் ராஜிநாமா தொடர்பாக ஆலோசனை நடத்தியிருக்கிறார்கள்.

இதை பக்குவமாக அவரிடம் எடுத்துச் சொல்லி பதவியில் இருந்து விலகக் கோரலாம் என்பது அவர்கள் முடிவு. விஜயபாஸ்கர் ராஜிநாமா செய்தால் ஆட்சி  கவிழ்வதோடு பாஜக  ஒன்று பட்ட அதிமுகவை தமிழக அரசியல் நலனுக்கு பயன்படுத்த முயல்வதிலும் சிக்கல்கள் வரும் என்பதால் சங்கடங்கள் இல்லாமல் விஜயபாஸ்கரை அமைச்சரையில் இருந்து  கழட்ட வேலைகள் துவங்கியுள்ளன.

இன்று அமைச்சர்  விஜயபாஸ்கர் தனது சுகாதாரத்துறை அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்யக் கூடும். முன்னதாக விசாரணைக்குப் பின்னர் ஊடகங்களிடம் பேசிய அமைச்சர் :- “பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு இதுபோன்ற சோதனைகள் வருவது இயல்பு தான். வருமானவரித்துறை அதிகாரிகளின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்துள்ளேன். வருமானவரித்துறை அதிகாரிகள் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்துள்ளேன். என்னை பற்றி வரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பேன்.” என்றார்.

 

 

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*