இன்று துணை குடியரசுத் தலைவர் தேர்தல்:வெல்வாரா வெங்கையா?

இந்தியாவின் அடுத்த துணை குடியரசுத் தலைவரைத் தேர்வு செய்யும் தேர்தல் இன்று நடைபெறுகிறது.

இந்தியாவின் குடியரசுத் தலைவரக ஆர்.எஸ்.எஸ் சிந்தனையாளர் ராம்நாத் கோவிந்த் கடந்த 25-ஆம் தேதி பதவியேற்றுக்கொண்டார். இதனையடுத்து தற்போது துணை குடியரசுத் தலைவராக இருக்கும் ஹமீது அன்சாரியின் பதவிக்காலம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி முடிவடைகிறது. இதனைத் தொடர்ந்து அடுத்த குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டிய்ட பாஜக சார்பில் வேட்பாளராக வெங்கையா நாயுடுவும், எதிர்க்கட்சிகளின் சார்பில் காந்தியின் பேரனான கோபால கிருஷ்ண காந்தியும் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளனர். நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறும் இந்த தேர்தலில். லோக்சபா மற்றும் ராஜ்யசபா எம்.பிக்கள், இரு அவைகளின் நியமன எம்.பிக்கள் வாக்களிப்பார்கள்.

இரு அவைகளின் மொத்த எம்.பிக்கள் பலம் 790 ஆகும். லோக்சபாவில் மொத்தம் 545 உறுப்பினர்களில் பாஜகவுக்கு 281 பேர் உள்ளனர். தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மொத்தமாக 338 பேர் உள்ளனர். 243 பேர் கொண்ட ராஜ்யசபாவில் பாஜக தனிப் பெரும் கட்சியாக உயர்ந்துள்ளது. 2-வது இடத்தில் காங்கிரஸ் உள்ளது. லோக்சபாவில் பாஜகவுக்கு தனி பெரும்பான்மை உள்ளது. ராஜ்யசபாவிலும் அதிக எம்.பிக்கள் கிடைத்துள்ளனர். எனவே வெங்கையா நாயுடுவின் வெற்றி எளிதானதாக மாறியுள்ளது. காலை 10 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறும். இரவு 7 மணிக்கு முடிவுகள் அறிவிக்கப்படும். மதச்சார்பின்மை நாட்டின் குடியரசுத் தலைவர் ஆர்.எஸ்.எஸ் சிந்தனையுள்ளவராக அமர்ந்திருக்கும் நிலையில், துணை குடியரசுத் தலைவரும் ஆர்.எஸ்.எஸ் சிந்தனையுள்ளவராக அமரப்போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*