எச்சரிக்கை விடுக்கும் ஸ்டீபன் ஹாக்கிங்

வேற்று கிரகவாசிகளும் நம்மைபோன்று வேறு கிரகங்களைத் தேடிக் கொண்டிருப்பார்கள் என்றும் நம் பூமி அவர்களிடம் சிக்கினால் பூமியையும் தங்கள் கைவசப்படுத்த அவை முயலும் என்று விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் Gliese 832c என்ற கிரகத்தை கண்டுபிடித்துள்ளனர். அங்கு வேற்றுகிரகவாசிகள் வசிக்கலாம் என்று கூறப்படுவதால், அது தொடர்பான ஆய்வுகள் மேலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் இந்த செய்தியை அறிந்து, அந்த கிரகத்தைப் பற்றி ஆய்வு மேற்கொள்வதை நிறுத்த எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், அந்த கிரகத்தில் இருக்கும் ஏலியன்ஸை நாம் தொடர்பு கொண்டால், நமக்குத் தான் பிரச்சனை என்று கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், நிச்சயமாக ஒரு நாள் வேற்றுகிரகவாசிகளிடம் இருந்து நமக்கு சிக்னல் வரும்.

ஆனால், அந்த சமயத்தில் நாம் அதற்கு எப்படி பதில் அளிக்கப் போகின்றோம் என்பதில் தான் நமது சாமர்த்தியம் அடங்கியுள்ளது. வேற்றுகிரகவாசிகள் புத்திசாலித்தனமாக இருப்பார்கள், அதனால் அவர்களை தொடர்பு கொள்ளும் போது, கவனமாக இருந்தால் மட்டுமே நாம் நம் பூமியையும் மக்களையும் அழிவில் இருந்து காப்பாற்ற முடியும்.

அவர்களும் நம்மைப் போன்று தான் பிற கிரகங்களைத் தேடிக் கொண்டிருப்பார்கள், நாம் அவர்களிடம் சிக்கினால் பூமியையும் தங்கள் வயப்படுத்தவே முயல்வார்கள், அவர்கள் நம்மை தொடர்பு கொள்ளாதவரை தப்பித்தோம். ஒரு வேளை தொடர்பு கொண்டால் பிறகு மனித இனமே மொத்தமாக அழிந்து விடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*