கர்நாடகா அமைச்சர் வீட்டில் ரெய்டு : வைரலான போலி வீடியோ!#fake video

கர்நாடகா மாநில மின்துறை அமைச்சர் சிவக்குமார் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியபோது எடுக்கப்பட்ட வீடியோ என்று வெளியானது கடந்த 2016-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட வீடியோ என்று தெரிய வந்துள்ளது.

காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் 44 பேரை தங்க வைக்க ஏற்பாடு செய்தது உள்ளிட்ட காரணங்களுக்காக கர்நாடக மின்துறை அமைச்சர் சிவக்குமார் வீட்டில் கடந்த 4 நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.அமைச்சருக்கு சொந்தமான கர்நாடகா மற்றும் டில்லியில் உள்ள 60 க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது. கர்நாடகா அமைச்சர் சிவக்குமார் வீட்டில் நடந்த வருமான வரித்துறை சோதனையில் 300 கோடி ரூபாய் சிக்கியிருப்பதாக வருமானவரித் துறையிடமிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனையடுத்து அவரது வீட்டில் எடுக்கப்பட்ட வீடியோ என ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. அதில் ஒரு அறையில் அலமாரி, சூட்கேஸ், அட்டைப்பெட்டி என முழுக்க பணத்தால் நிரப்பப்பட்டுள்ளது.

தற்போது அந்த வீடியோ 2016-ஆம் ஆண்டு டெல்லியில் T & T சட்ட நிறுவனத்தின் மீதான வருமான வரித்துறை சோதனையின் போது வெளியான வீடியோ என்பது  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது துர்காமேனன் என்பவரது ட்விட்டர் கணக்கில் பின்வருமாறு வெளியாகியுள்ளது. ” சிவக்குமார் வீட்டில் திறக்கப்பட்டுள்ள ஒரு லாக்கர்… காங்கிரஸ் எங்கு சென்று உங்களது முகத்தை மறைத்துக் கொள்ளப் போகிறீர்கள்?” என்ற தொனியில் ட்வீட் செய்துள்ளார்.

இவரை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மின்வாரிய அமைச்சர் பியுஷ் கோயல், முதல் பிற பி.ஜே.பி தலைவர்களும் ட்விட்டரில் பின்தொடர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதே வீடியோ தமிழகத்தில் மணல் ப்ரோக்கர் சேகர் ரெட்டி வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையின்போது சேகர் ரெட்டியின் வீட்டில் கைப்பற்றப்பட்ட பணம் என்று கூறி பகிரப்பட்டு வந்தது. வருமான வரித்துறையினர் எங்கு சோதனை நடத்தினாலும் இந்த வீடியோவே பகிரப்பட்டு வருகிறது. மேலும் சோதனையில் எதனை கைப்பற்றியிருக்கிறோம் என்று இதுவரை நடத்திய சோதனைகளில் தெளிவாக எதுவுமே கூறாத வருமான வரித்துறை பாஜகவின் ஆளாக செயல்படுவதை இந்த விவகாரம் உறுதிப்படுத்தியுள்ளது.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*