பாகிஸ்தான் அமைச்சரவையில் ஒரு ஹிந்து!

பாகிஸ்தானின் புதிய பிரதமாக தேர்வுசெய்யப்பட்டுள்ள அப்பாஸியின் அமைச்சரவையில் இந்து மதத்தை சேர்ந்த ஒருவர் இடம்பெற்றுள்ளார்.

பனாமா பேப்பர் ஊழல் வழக்‍கில் பாகிஸ்தான் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீஃபை தகுதிநீக்கம் செய்து அந்நாட்டு உச்சநீதிமன்றம் அண்மையில் அதிரடி உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து பிரதமர் பதவியை நவாஸ் ஷெரீஃப் ராஜினாமா செய்தார். இதனையடுத்து பாகிஸ்தானின் இடைக்‍காலப் பிரதமராக அந்நாட்டு பெட்ரோலியத்துறை அமைச்சர் ஷாஹித் கான் அப்பாஸி கடந்த செவ்வாக்கிழமை அன்று தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில் பிரதமர் ஷாஹித் ககான் அப்பாஸியின் புதிய அமைச்சரவையில் அந்நாட்டின் சிறுபான்மை பிரிவைச் சேர்ந்த தர்ஷன் லால் என்பவர் இடம் பெற்றுள்ளார். மருத்துவரான லால், பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தை சேர்ந்தவர் ஆவார். ஆளும் கட்சியான பாகிஸ்தான் முஸ்லீம் லீக் சார்பில் போட்டியிட்டு அந்நாட்டு நாடாளுமன்றத்திற்கு 2-வது முறையாக உறுப்பினராக தேர்வுசெய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் அமைச்சரவையில் ஹிந்து ஒருவர் முதன்முறையாக இடம் பெற்றிருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*