#BlueWhaleSuicideGame: உங்கள் குழந்தை தற்கொலை செய்து கொள்ளலாம்:எச்சரிக்கை!

இதுதான் முதலில் முக்கியம் ஆபத்தை அறிந்து கொள்ள இதை க்ளிக் பண்ணுங்க!

மொபைல்தான் வாழ்க்கை என்றாகி விட்டது சகலருக்கும். பாத்ரூம் போகும்  அந்த சில நிமிடங்களில் கூட ஏதும் அப்டேட்ஸ் இருக்குமோ என்று கியூரியாசிட்டு உருவாகும் அளவுக்கு மொபைல் மூன்று வேளை உணவு என்றாகி விட்டது.

அது நமக்குள் உருவாக்கும் பல பின் விளைவுகளுக்கு அப்பால் பல பெற்றோர்கள் குழந்தைகள் நம்மை தொந்தரவு செய்யாமல் இருக்க முன்னர் டிவிகளை திறந்து விட்டார்கள். இப்போது மொபைலை கையில் கொடுத்து விட்டு இவர்கள் இன்னொரு மொபைலில் முழ்கி விடுகிறார்கள். ஆனால் அந்த மொபைலில் கொட்டிக் கிடக்கும் ஆபத்துகளில் குழந்தைகளைக் கொல்லும் கொலை கார ஆப்ளிகேஷன் உள்ளதை அறியாமல்.

தலித் காதலர்களுக்கு நடந்த இந்த கொடுமை உங்களுக்கு தெரியுமா?

இன்று பள்ளி செல்லும் சிறுவர்கள் முதல் அனைவரிடமும் மொபைல் போன் இருக்கின்றது. மொபைலின் மூலம் சிறுவர்கள் சமூக வலைதளங்களை எளிதாக கையாள்கின்றனர். சமூக வலைதளங்கள் மூலமாக பல பயனுள்ள தகவல்களை அறிந்து கொள்ளலாம் என்றாலும் இதில் அதே சதவிகித ஆபத்தும் நிறைந்திருக்கிறது. சமூக வலைதளங்கள் வழியாக

ஒரு மொபைல் அப்ளிகேஷனால் உங்கள் குழந்தையை தற்கொலை செய்யவைக்க முடியும் என்றால் நம்புவீர்களா?, நம்பிதான் ஆகவேண்டும். அப்படி ஒரு சம்பவம்தான் இங்கே நிகழ்ந்திருக்கிறது.

 

 

 

 

 

 

 

பிலிப் புடெகின் எனும் 22-வயது ரஷ்ய இளைஞர் உருவாக்கிய சமூக வலைதளக் குழுதான் #bluewhalesuicidegame. இந்த குழுவில் இணைந்தவர்களுக்கு அதன் பொறுப்பாளர் வெவ்வேறு டாஸ்க்-களை (வேலை) வழங்குவார். பாடல்கள் கேட்பது, படம் பார்ப்பது, நம்மை நாமே சித்திரவதை செய்து கொள்வது என தொடங்கும் இந்த டாஸ்க்குகளின் இறுதி முடிவு தற்கொலை. நாம் தற்கொலை செய்வதற்கு முன் இந்த குழுவில் இன்னொருவரை இணைத்துவிட்டு சாக வேண்டும்.

த்ரில்லாக இருக்கிறதே என இந்த மொபைல் டாஸ்கில் இணைந்து  இந்த விபரீத விளையாட்டால் ரஷ்யாவில் மட்டும் 130 இளைஞர்கள் தற்கொலை செய்திருக்கிறார்கள்.2013-ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த கேமின் ஆபத்தை அப்போது பலரும் அறிந்திருக்கவில்லை.

#bluewhalesuicidegame குழுவின் பொறுப்பாளர் தினம் ஒரு டாஸ்க் என 50 நாட்களுக்கு கொடுப்பார். கைகளை பிளேடினால் கிழித்து புகைப்படம் எடுப்பது, இரவு நேரங்களில் சைக்கோ மற்றும் பேய் திரைப்படங்களை பார்க்கச் சொல்வது என இப்படியாக தொடரும் டாஸ்க்குகளின் கடைசி நாளில் நீங்கள் தற்கொலை செய்து கொள்வீர்கள்.

நீலத் திமிங்கலங்கள் தன்னை அழித்துக்கொள்ள கடற்கரை நோக்கி வருமாம், அதனால்தான் இதற்கு #bluewhale என்ற பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இந்த குழுவிலுள்ளவர்கள் தங்களை whale என்று அழைத்துக் கொள்வார்கள். ரஷ்யாவில் மட்டும் வெகுவாக பரவியிருந்த இந்த தற்கொலை விளையாட்டு, மெல்ல மெல்ல பல்வேறு நாடுகளிலும் பரவியது. இதற்கு இந்தியா ஒன்றும் விதிவிலக்கல்ல, மும்பையை சேர்ந்த 14-வயது பள்ளி மாணவன் இந்த விளையாட்டால் தற்கொலை செய்திருக்கிறான்.

 

 

 

 

 

 

மஹாராஸ்டிரா மாநிலம், மும்பையை சேர்ந்த 14-வயது சிறுவன் #bluewhalesuicidegame குழுவில் இணைந்ததன் மூலமாக தற்கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மஹாராஸ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும் என தெரிவித்தார். மும்பை போலீஸார், இதுதான் இந்தியாவில் மொபைல் விளையாட்டால் நடந்த  முதல் தற்கொலையா என்று விசாரித்து வருகின்றனர்.ஆனால் இந்தியாவில் போகிமான் கேமால் சில மரணங்கள் நடந்திருக்கின்றன. என்றாலும் அதை விபத்தா, கொலையா, மரணமா என்று வகைப்படுத்துவதில் சிக்கல் இருக்கிறது. என்றாலும் போகிமானும் ஒரு கொலைகார ஆப்ளிகேஷன்தான்.

கூட்டம் கூட்டமாக இந்த கேமில் பல சிறுவர், சிறுமிகள் இணைய மரணமும் ஒரு பக்கம் அதிகரித்துச் சென்றது. இதன் ஆபத்தை உணர்ந்த பெற்றோர்கள் போலீசுக்குப் போக  இந்த விளையாட்டை உருவாக்கிய பிலிப் புடெகின், ரஷ்யாவில் கைது செய்யப்பட்டான். அவனுக்கு 3 ஆண்டுகள் மட்டுமே சிறை தண்டனை வழங்கியிருக்கிறது ரஷ்ய நீதிமன்றம். காரணம் நேரடியாக இவைகளை கொலைகள்  என்றும் அந்தக் கொலைகளில் பிலிப் புடெகினுக்கு தொடர்பிருக்கிறது என்றும் நிரூபிக்க முடியவில்லை.

உளவியல் கல்வி முடித்த பிலிப் புடெகின்  “இந்த விளையாட்டின் மூலமாக வாழ தகுதியற்றவர்களை தற்கொலை செய்ய தூண்டுவேன்” என்று பதிலளித்தான். என்றாலும் கூட தற்கொலைக்குத் தூண்டிய நேரடி  ஆதாரங்கள் இல்லை. அதுதான் விர்ச்சுவல் உலகம். யாரோ ஒருவர் எங்கிருந்தோ உருவாக்கிய ஆப் மூலம் உங்கள் குழந்தை மரணத்தை சந்தித்தால் அதற்காக யாரையும் நீங்கள் தண்டிக்க முடியாது.

இந்த கொலைகார ஆப்பில் இருந்து உங்கள் குழந்தைகளை பாதுகாக்க

#

குழந்தைகளை எப்போதும் உங்கள் கண்காணிப்பின் கீழும் அரவணைப்பின் கீழும் வைத்திருங்கள்.

#

தொல்லை விட்டால் சரி என்ற எண்ணமே உங்கள் குழந்தைகளை உலகை மறந்து மொபைலில் மூழ்கடிக்கச் செய்கிறது.

#

15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இணைய வசதி உள்ள தொலைபேசிகளை வழங்காதீர்கள். காரணம் ஆபத்து எந்த வடிவத்திலும் அனுமதி கேட்டு விட்டு உள்ளே வராது.

#

தேவையற்ற அப்ளிகேஷன்களை தரவிரக்கம் செய்யாமல் தடுத்து பூட்டு போட்டு வைக்கும் வசதியை செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

#

மிக முக்கியமாக செல்போன், கம்யூட்டர், டிவி  என இந்த விர்ச்சுவல் உலகிற்கு அப்பால் விளையாடவும் குழந்தைகள் அனுபவிக்கவும் ஏராளமான விஷயங்கள் உள்ளன. என அந்த உலகை உங்கள் குழந்தைக்குச் சொல்லுங்கள்.

 

All About Deadly 'Blue Whale Suicide Challenge'

The #BlueWhaleSuicideGame is believed to be a social media group and encouraging people to kill themselves. Here's how!

Posted by Indiatimes on Wednesday, August 2, 2017

video credits: Indiatimes

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*