பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஆமிர்கானுக்கு உதவிய ஷாருக் #Video

பாலிவுட் நடிகர் ஆமிர்கான் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். அதனால் நேற்று நடந்த ‘சத்யமேவ ஜெயதே வாட்டர் கப் 2017’ விருது வழங்கும் நிகழ்ச்சியில் இவரால் கலந்து கொள்ள இயலவில்லை. இந்நிலையில் இது பற்றி தனது மனைவி கிரண் ராவோ உடன் இணைந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் விளக்கம் அளித்துள்ளார். மேலும் நேற்று ‘உலக நண்பர்கள் தினம்’ என்பதால் தனக்கு பதிலாக நண்பர் ஷாருக்கான் விழாவில் கலந்து கொள்வார் என்றும் கூறினார். அதன்படி ஷாருக்கும் நிகழ்வில் கலந்து கொண்டார். விழாவில் கலந்து கொண்டு பேசிய ஷாருக் இந்த வாய்ப்பளித்த ஆமிர்கானுக்கு நன்றி என கூறியுள்ளார்.

இது ஒரு தொற்று நோய் என்பதால் மருத்துவர்களின் ஆலோசனைப் படி பொதுஇடங்களுக்கு செல்வதை தவிர்த்து வீட்டிலிருந்த படி சிகிச்சை மேற்கொண்டு வருகிறார் ஆமிர்கான். பன்றிக் காய்ச்சல் பற்றிய விளக்கம் இதோ…

உலகையே அச்சுறுத்தி வரும் பன்றிக்காய்ச்சல் 1920 – 1930-ம் ஆண்டுகளில் பன்றிகளிடம் காணப்பட்டது. ஆரம்பத்தில் பன்றிகளிடம் இருந்து பன்றிகளுக்கு காய்ச்சல் பரவி வந்தது. நாளடைவில் பன்றிகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவத் தொடங்கியது. அதன்பின் மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவி வருகிறது. இதனால் இந்தக் காய்ச்சல், பன்றிக்காய்ச்சல் என்று அழைக்கப்படுகிறது.

தற்போது பன்றிகள் மூலமாக மனிதர்களுக்கு பன்றிக்காய்ச்சல் பரவுவதில்லை. ‘எச்1என்1 – இன்ஃப்ளுயன்சா வைரஸ்’ கிருமிகளால் பன்றிக்காய்ச்சல் பரவுகிறது. பன்றிக்காய்ச்சலுக்கு டாமி புளூ மாத்திரையை உட்கொண்டால் 5 நாட்களுக்குள் காய்ச்சல் முழுவதுமாக குணமாகிவிடும். ஆரம்பத்தில் கொடிய நோய் என்று கூறப்பட்ட பன்றிக்காய்ச்சல் தற்போது வீரியம் குறைந்து சாதாரண வைரல் காய்ச்சல் என்றுதான் கூறப்பட்டு வருகிறது.

இருப்பினும் இதிலிருந்து நம்மை பார்த்துக் கொள்வது நல்லது. இந்தியாவில் தற்போது இந்த நோய் மீண்டும் பரவத் துவங்கியிருக்கிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*