ஆகஸ்ட் 22 வங்கி ஊழியர்கள் பொது வேலை நிறுத்தம்!

பொதுத்துறை வங்கிகளை  தனியார் மயமாக்குவதை கண்டித்து வருகிற 22-ஆம் தேதி அகில இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.
வங்கிகளை தனியார் மயமாக்க கடும் எதிர்ப்பு நீண்ட நாடகளாக உள்ளது. அதுவும் 2016 நவம்பர் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு மின்னணு பணப்பரிவர்த்தனையை பரவலாக்கிய மத்திய அரசு தனியார் வங்கிகளை ஊக்கு வித்து வருகிறது. அரசு வங்கிகள் பணத்தட்டுப்பாட்டோடு இயங்குவதாக பல்வேறு ஊழியர் சங்கங்கள் குற்றம் சுமத்தி வந்த நிலையில்  செப்டம்பர் 15-ஆம் தேதி அனைத்து வங்கி ஊழியர்கள் பங்கேற்கும் பிரமாண்டமான பேரணி டெல்லியில் நடைபெற உள்ளது. அத்துடன் 22-ஆம் தேதி பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது சம்மேளனம். இதனால் அனைத்து வங்கிப் பணிகளும் முடங்கும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*